Monday May 25th 2020

Archives

மட்டு.கல்லடி இராணுவ முகாமில் குண்டுவெடிப்பு: படைச்சிப்பாய் பலி; அதிகாரி உட்பட மூவர் காயம்
SLA_Fire_civilionsமட்டக்களப்பு கல்லடி இராணுவ முகாம் பகுதியில் இன்று நண்பகல் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவமொன்றில் இராணுவ குண்டு செயலிழக்கும் பிரிவைச்சேர்ந்த சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன் அப்பிரிவைச் சேர்ந்த இராணுவ லெப்டினன் தர அதிகாரி ஒருவரும் இரு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் உட்பட மூவர் காயமடைந்துள்ளனர் மேலும்… »
யுததததில் பலியான படைவீரர்களை அரசாங்கம் மறந்து விட்டது: ரணில் விக்கிரமசிங்க
02_08_08_sladeadbodies_02இறுதி யுத்தத்தின் குறிப்பிட்ட ஒரு தாக்குதலில் மாத்திரம் கொல்லப்பட்ட 5,000 படை வீரர்களுக்கும், காயமடைந்த 20,000 வீராகளுக்கும் அரசாங்கம் கௌரவம் செலுத்தவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.
வெற்றியை கொண்டாடும் அரசாங்கம் வெற்றிக்கு காரணமானவர்களை புறம் ஒதுக்கியதாக அவர் தெரிவித்துள்ளார்.  இந்த வெற்றியில் பொதுமக்களும் பாரிய பங்களிப்பை வழங்கியிருந்தனர். மேலும்… »
மாதுரு ஓயா இராணுவ கட்டுப்பாட்டுப்பகுதியில் இரண்டு சடலங்கள் மீட்பு
dead006அடையாளம் தெரியாத இரண்டு சடலங்கள் இன்று மாதுரு ஒயா இராணுவ கட்டுப்பாட்டு பகுதியில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் நிமல் மெதிவக்க தெரிவித்துள்ளார்.
இரண்டு சடலங்களும் இராணுவத்தினரால் பொலிசாருக்கு தெரிவித்த முறைப்பாட்டை அடுத்தே மீட்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும்… »
அரசியல் போர்க்களத்தில் குதிப்பாரா ஜெனரல் சரத் பொன்சேகா?-இதயச்சந்திரன்

sarath_fonsekaஎதிர்பார்த்த அளவுக்குப் பெரும் வெற்றிகளைக் கொடுக்காத தென் மாகாண சபை தேர்தலைத் தொடர்ந்து, அடுத்த வருட முற்பகுதியில் நாடாளுமன்றம் மற்றும் ஜனாதிபதி தேர்தல்களை நடத்திட அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகத் தெரிய வருகிறது.
இதனை நோக்கிய அணி சேரல்கள், தேர்தல் கூட்டுக் காய்நகர்த்தல்கள், எதுவித அரசியல் கோட்பாடுகளுமற்ற திசை நோக்கி நகர்கின்றன. மேலும்… »

அமெரிக்காவிலிருந்து தாயகம் திரும்பவிருக்கும் சரத் பொன்சேகாவைக் காத்திருக்கும் காலம்(ன்)……. : சங்கிலியன்
sarath_mahindaதனது கிரீன்காட் விசாவை புதுப்பிக்கவும், மற்றும் சில சுய அலுவல்கள் காரணமாகவும் அமெரிக்காவிற்கு விஜயம் செய்த முன்னாள் இலங்கையின் இராணுவத் தலைமை அதிகாரியான சரத் பொன்சேகாவினை அமெரிக்க அரசு, மனித உரிமைமீறல் தொடர்பாகவும், இலங்கை அரசின் யுத்தக்குற்றங்கள் தொடர்பாகவும் பல விசாரணைகள்…….
மேற்கொள்ளப்படலாம் என எதிர்பார்ககப்பட்ட நிலையில் அவர்மது அத்தகைய ஓர் விசாரணையை நடத்தப்படுமாயின் அமெரிக்காவின்மது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஜே.வி.பி யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க அமெரிக்காவை எச்சரிக்கை செய்துள்ளார். மேலும்… »
உயிரம்புகள் முழு நீலத் திரைப்படம் [தரம் HD]

உயிரம்புகள் முழு நீளத் திரைப்படம் (தமிழீழம்).

திரைக் கதை – இயக்கம்: அல்பேட் பவுலஸ்

250 போராளிகளை மீட்டெடுக்கும் மூன்று கரும்புலி வீரர்களின் மேலும்… »

ஜனாதிபதியை விமர்சித்த சிங்கள இளைஞன் கைது

nஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோரை இணையத்தளத்தினூடாக தகாத வார்த்தைகளால் பேசிய சிங்கள இளைஞன் ஒருவரை இரகசிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அளவ்வ, புதிய வீதியைச் சேர்ந்த கயான் ராஜபக்ஷ எனும் சிங்கள இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார். மேலும்… »

Page 1,821 of 1,821« First...102030...1,8171,8181,8191,8201,821