Monday May 25th 2020

Archives

எம்மைப் பற்றி…

எம்மைப் பற்றி…

புதினம்செய்தி.கொம் நாளாந்த செய்திகளை உடனுக்குடன் வெளிக்கொணரும் ஒரு தமிழ் இணையத் செய்தித் தளம்.

இவ் இணையத்தளம் 2009ம் ஆண்டு யூன் மாதத்தில் இருந்து இலங்கை இந்தியா கனடா ஐக்கிய இராச்சியம் அவுஸ்திரேலியா அமெரிக்கா உட்பட பல நாடுகளிலும் வாழும் ஊடகத்துறை நண்பர்களின் ஒத்துழைப்புடன் ஆரம்பிக்கப்பட்டது. இவர்கள் தமது நேரத்தினை ஒதுக்கி உலகவாழ் தமிழ் மக்களுக்கான ஒரு சேவையாக இத்தளத்திற்கு உதவி புரிகிறார்கள்.

எமது இணையத்தளத்தில் வெளிவரும் செய்திகளின் நம்பகத்தன்மை மற்றும் ஆதாரங்கள் என்பவற்றை இயன்றவரை உறுதி செய்து வெளியிடுவதற்கே நாம் விரும்புகிறோம். ஆனாலும் அவ்வாறு செயற்படுவதற்காக நாம் எடுத்துக் கொள்ளும் நேரம் மேற்படி செய்தியை பழைய செய்தியாக்கிவிடக்கூடிய சாத்தியக்கூறு உண்டு.

அத்தோடு மேற்குலக நாடுகளில் இருந்தவாறு தாயகத்து நிகழ்வுகளின் ஆதாரங்களை உறுதிப்படுத்துவதற்கான தடையாக நாடுகளிற்கிடையேயான நேர வித்தியாசம் அமைந்துள்ளது. எனவே எமது தளத்தில் வெளிவரும் செய்திகளின் நம்பகத்தன்மை அல்லது ஆதாரத் தரவுகள் என்பவற்றிற்கு நாம் பொறுப்பாளிகளல்ல.

எமது தளத்திற்கு வருகை தருபவர்கள் உங்கள் ஆக்கபூர்வமான கருத்துக்களைத் தெரிவித்தால் நாம் மேலும் எமது சேவையை மேலும் மேம்படுத்த அது வாய்ப்பாக அமையும்.

அன்புடன்
புதினம்செய்தி குழுவினர்

Reader Feedback

31 Responses to “எம்மைப் பற்றி…”

 1. siva says:

  wel come back

 2. veeran says:

  very soon back to real puthinam.com

 3. sunthar says:

  I was realy upset without puthinam. Now I am happy .

 4. Ragu says:

  Welcome Bakc

 5. peterrajaguru says:

  welcome back

 6. RK says:

  I am very happy to see you back…any help please let me know.

 7. Nishanth says:

  Why don’t diviate “ptuthinam.com” to “puthinamnews.com”,I said is better thing for your newsviewers,It’s my simple suggestion for u

 8. k.pathi says:

  ups&downs are unavaoidable!
  why u gave a long break?

 9. Rajan says:

  You are fraud. You use time and start this fake website. Puthinam shutdown by Owner and well wishers.

 10. Eelamboys says:

  இதுவே எமது யதார்த்த கலக்கம் இன்றைய நிலையில் நன்றி !

 11. athithiyaprabakaran says:

  melum ethirpparkiren

 12. raghu says:

  Soon Tamil Elam

 13. t.kumar says:

  which one is orignal puthinam or puthinapalagai. pls clear the doubt.

 14. suganthini says:

  good keep it up

 15. Thamizhachchikku pirantha thamizhan says:

  Warm WELCOME Puthinam news

 16. PUDUVAI BHARATHY says:

  TRUTH IS NEVER FAIL WAIT AND SEE MY DEAR SRILANKAN TAMIL PEOPLES.

 17. Srinivasa Subramanian G says:

  Dear Puthinam ,

  I was very upset that you had left and now am very very happy that you are back though in another name . but the very word puthinam itself brings back peace . keep up the good job . Tamizhan endru sollada thalai nimirnthu nillada.

 18. Unioversity of Jaffan Students union 2004-2008 says:

  அவசர ஊடக மறுப்பு அறிக்கையும் – தமிழ் தேசியத்திற்கான மக்கள் முண்னணிக்கு தார்மீக ஆதரவும்.
  கடந்த April 6ம் ,7ம் திகதிகளில் பல்கலைக்கழக முன்னால் மாணவர் ஒன்றிய தலைவர்கள் ,பல்கலைக்கழக முன்னால் மாணவர் பிரதிநிதிக ள்(2005-2006) ஆகிய பெயர்களில் தமிழ் வின்இ லங்கா சிறி ஆகிய இணையத்தளங்களில் வந்த அறிக்கைகளுக்கும் 2000ம் ஆண்டு தொடக்கம் இதுவரை உள்ள மாணவர் ஒன்றியத்திற்கும் அதன் பிரதிநிதிகளுக்கும் எந்தவித தொடர்பு இல்லை எனவும் இவ்வாறான அறிக்கைகள் எதனையும் பழைய மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் ஆகிய நாம் வெளியிடவில்லை என்பதை அறியத்தருவதோடு இவ்வறிக்கைகள் தொடர்பான உறுதிப்பாட்டை அதன் மூலப் பிரதிகள் அனுப்பிய விபரம் என்பவற்றை எமக்கு உடனடியாக தந்து உதவுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
  2000ம் ஆண்டு காலப்பகுதியில் 1ம் வருட மாணவர்களாக இருந்து முதலாவது பொங்கு தமிழ் நிகழ்வுகளில் நின்று பெரும்பங்காற்றியது தொட்டு தொடர்ந்து வந்த பொங்கு தமிழ் 2001இ 2004ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தல்கள் கடந்த காலங்களில் நடைபெற்ற மக்கள் எழுச்சிப் போராட்டங்கள் விழிப்புணர்வுகள் ஆகியவற்றில் முழுமையாக அர்ப்பணித்து தேசியத்துடன் செயற்ப்பட்டு வந்த மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் ஆகிய நாம் எமது மாணவர் ஒன்றிய பிரதிநிதிகளின் பாதுகாப்பு கருதியும் இன்று உள்ள மாணவர் ஒன்றியத்தின் சுதந்திரமான செயற்பாடுகளுக்கு இடமளிக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்திற்காகவும் எம் தேசம் மீதும் தேசியத்தின் மீதும் கொண்ட பற்றுக்களை ஆழ் மனதில் நிறுத்தி உண்மையான தேசியத்திற்காக போட்டியிடும் தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்ணனிக்கு அவர்களின் சரியான உறுதியான தேர்தல் விஞ்ஞாபணத்திற்கு எமது ஆதரவை தெரிவித்து திரைமறைவில் நின்று செயற்படடுக்கொண்டிருக்கின்றோம்.
  எப்போதும் நாம் எமது தமிழ் தேசியத்தை அதன் கொள்கைகளை தமது உயிர்களை அர்பணித்த 35000ற்கும் மேற்பட்ட மாவீர தெய்வங்களின் கனவுகளைத் தொடர்ந்து முன்னெடுப்பவர்களையே ஆதரித்து வந்துள்ளோம் வருகின்றோம் வருவோம்.
  இந்த வகையிலேயே எமது தற்போதைய பல்கலைக்கழக மாணவ ஒன்றியத்தின் கடந்த வார அறிக்கைகள் அமைந்திருந்தன என்பது யாவரும் அறிந்ததே.
  இந்த சூழ்நிலையில் எமது சகல கடந்த கால பல்கலைக்கழக மாணவ ஒன்றியத்தின பிரதிநிதிகளிடமும்
  ஆலோசித் இவ் கண்டன அவசர அறிக்கையை வெளியிடுவதுடன் ஒரு நாடு இரு தேசம் என்ற உறுதியான கொள்கையுடன் தேர்தலில் களமிறங்கியுள்ள தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்ணனிக்கு எமது தார்மீக வெளிப்படையான ஆதரவை தெரிவிப்பதுடன்
  எம்மோடு கடந்த காலங்களில் மிகவும் நெருக்கடியான சூழ்நிலைகளில் தோளோடு தோள் நின்று இராணுவ திறந்த வெளிச் சிறைச்சாலைகளில் நின்று உரத்து எமக்கு ஆதரவு தந்த விரிவுரையாளர்கள் மாணவர்கள் மாணவ அமைப்புக்கள் பொது அமைப்புக்கள் எமது பாசத்திற்குரிய குடா நாட்டு மக்கள் அணைவரையும் தமிழ் தேசிய கொள்கைகளில் நின்று உறுதியாக செயற்படும் தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்ணனியின் சைக்கிள் சின்னத்திற்கு தங்கள் ஆதரவை சுதந்திரமான முறையில் அன்புடனும் உரிமையுடனும் கேட்டுக்கொள்கின்றோம்.
  அத்துடன் புலம்பெயர்ந்துள்ள மக்கள் அனைவரும் இந்த செய்தியினை உடனடியாக தாயகத்தில் உள்ள மக்களுக்கு தெரியப்படுத்துவதுடன் தமிழ் தேசியத்திற்காக சைக்கிள் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு உங்கள் உறவுகள் நண்பர்கள் அயலவர்கள் அனைவரையும் பணிவுடன் கேட்டுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். புலம்பெயர் உறவுகள் நீங்களே இன்று தமிழ் தேசியத்திற்கான ஊடகம் உறவுப் பாலம் என்பதை உணர்ந்து செயற்படுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
  “ஈனப் பிறவிகள் சிலர் இனத்தை விற்கினும்
  மானத் தமிழர் நாம் மண்டியிட மாட்டோம்”
  “எங்கள் ; ஆதரவு தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்ணனிக்கு
  எங்கள் வாக்கு சைக்கிள் சின்னத்திற்கே”
  நன்றி
  யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்
  2004 – 2008
  [email protected]

 19. kuka says:

  thanks

 20. Shankar.N.Nainar says:

  வணக்கம்!
  மீண்டும் புதினம் மிக்க மகிழ்ச்சி!
  உங்கள் சேவை வளர்க!

  தமிழன்புடன் சங்கர்.ந.நயினார்

 21. dushyanthy says:

  why your website not publishing valuthi’s article anymore? His articles are the best ones. During mullivaikal incident he wrote an article about thalaivar is excellant. when I was reading that article I have full of tears in my eyes touch my heart & soul.
  please try to get his article about our future struggle what is best for our people.

 22. John Christopher says:

  Thanks a lot to Puthinam and its members for all that you are doing to enlighten the Tamils and the whole world. There are millions who would like to read all your articles, current affairs in the Eelam soil, and the sufferings of our brothren all over the world, but I know these people don’t have access to you through net or in any other mode. It should reach every Tamilian and he should know the truth about our race and how it is crushed by Sinhalese and their supporters. May I make a request, would you publish some of their phone numbers or mail ids of some leaders who fight for our people. Like Annan Pro. Ramasay Pinang Vice Chief Minister, Annan Seeman, Annan Vaiko, Annan Nedumaran etc. The ordinary mass should have access to them through phone or mail. They also can reach millions of youth who wish to join them in their battle for our people. If you can with their permission please publish them. Thanks once again in advance and hoping to get a good reply

 23. subbu says:

  nice to see ……….

 24. Bharathiar says:

  வணக்கம்,
  புதினம் இணையத்தளத்தை சிறப்புடன் நடாத்தும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. உங்கள் சேவை என்றென்றும்(நமது ஈழம் கிடைக்கும் வரையும்,கிடைத்த பின்பும்)தொடர எல்லாம் வல்ல நல்லூர் முருகனை வேண்டுகிறேன்.

  அன்புடன்,
  பாரதி

 25. uthayanganesh says:

  உங்களிடம் தனிப்பட்ட முறையில் எவ்வாறு தொடர்பு கொள்வது. எந்தத் தகவலும் இல்லையே?. தயவுடன் ஈமெயில் முகவரி தரவும்

 26. எம்முடன் தொடர்பு கொள்ள: [email protected]

 27. Sundar says:

  I would like to see a mission statement of Puthinam and details of Publishers and Editors. There are so many Websites; I don’t know what are their objectives and aims. Who are the people behind these sites.

 28. Arudan says:

  தங்கள் அகப்பக்கத்தில் இன்று வெளியாகியுள்ள சர்வசித்தனின் கட்டுரை, ஏற்கனவே ‘ஈழநேசனில்’ மார்ச் 02,2011ல் வெளியாகி இருந்தது. தாங்கள் அதனை வெளியிடும் போது இதனைக் குறிப்பிட மறந்துவிட்டீர்கள் போலும்?!

 29. Eswaran.J says:

  வணக்கம் .
  இந்த புதினம் வலைதலம் மீண்டு வந்ததுபோல் தலைவரும் வரவேண்டும் அதெபோல் தனி தமிழ் ஈழமும் வரும் .

 30. Nakkeeran says:

  கனடா

  மே 15, 2011

  மாண்புமிகு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்கட்கு!

  வணக்கம். நீங்கள் மூன்றாவது முறையாகத் தமிழ்நாட்டின் முதல்வராகப் பதவி ஏற்றுள்ளீர்கள். உங்களுக்கு எமது இனிய வாழ்த்துக்கள்.

  இந்த வெற்றி “என்னுடைய வெற்றி” என்று கூறாமல் “இந்த வெற்றி எங்களுடைய வெற்றி, மக்களுடைய வெற்றி, மக்களுடைய உறுதிக்குக் கிடைத்த வெற்றி. ஆகவே தமிழக மக்களுக்கு நான் சொல்லக் கூடிய செய்தி உங்களது கண்ணீரைத் துடைத்துவிடுங்கள். துன்பத்தை மறந்து விடுங்கள் சிரித்துக்கொண்டே இருங்கள். உங்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் அமையும். அதற்கு நான் உறுதியளிக்கிறேன்” என்று கூறியிருப்பது எமக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

  பணபலம், ஊடகபலம், அதிகாரபலம் ஆகியவற்றை மிஞ்சி அதிமுக அணி வெற்றி பெற்றிருப்பது பெரிய சாதனையாகும். இந்தத் தேர்தலின் பின்னர் அதிமுக காணாமல் போய்விடும் என்று வீர வசனம் பேசியர்கள் காணாமல் போயுள்ளார்கள்!

  வெற்றிபெற்ற கையோடு இனப்படுகொலைக்காக, போர்க்குற்றத்துக்காக இலங்கை அதிபர் மகிந்த இராசபக்சேயை அனைத்துலக நீதிமன்றத்தின் முன் நிறுத்த இந்திய அரசு முயற்சி எடுக்க வேண்டும். இந்திய அரசு தமிழர்களுக்கு ஒரு கவுரவமான வாழ்க்கையை, கண்ணியமான வாழ்க்கையை அளிக்க இலங்கை அரசை வற்புறுத்த வேண்டும். இலங்கை பணிய மறுத்தால் இந்தியா மற்ற நாடுகளுடன் சேர்ந்து சிறிலங்கா மீது பொருளாதாரத் தடையை விதிக்க வேண்டும். இதைச் செய்தால் இலங்கை அரசு பணிந்துதான் ஆக வேண்டும்” என்று நீங்கள் ஜெயா தொலைக்காட்சிக்குக் கொடுத்த நேர்காணலில் கூறியிருப்பது தமிழீழ மக்களையும் புலம்பெயர் தமிழர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. முன்னைய காலம் போல் அல்லாது இம்முறை நீங்கள் அளித்துள்ள வாக்குறுதியைக் காப்பாற்றுவீர்கள் என நம்புகிறோம்.

  உங்கள் வெற்றிக்குப் பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் அதில் முக்கியமானது திமுக – காங்கிரஸ் அணிக்கு எதிரான மக்களது எதிர்மறை நிலைப்பாடே ஆகும். அனைத்துத் தரப்பு மக்களும் ஆட்சி மாற்றத்தை விரும்பினார்கள். வெற்றிக்கு இன்னொரு காரணம் தேர்தல் காலத்தில் திருமங்கல இடைத் தேர்தல் சூத்திரம் தேர்தல் ஆணையத்தால் பெருமளவு தடுக்கப்பட்டது ஆகும்.

  அரசியலில், திரைப்படத் துறையில் கருணாநிதி குடும்பத்தின் ஆதிக்கம், அங்கிங்கு இன்னாதபடி எதிலும் ஊழல், கையூட்டுக் கொடுக்காமல் அரச அலுவலகங்களில் எதையுமே செய்ய முடியாது என்ற அவலம், நாட்டில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் நடந்த கொலைகள், கொள்ளைகள், மணற்கொள்ளைகள், மின்வெட்டு, முள்ளிவாய்க்காலில் மனிதப் படுகொலை அரங்கேறிக் கொண்டிருந்த சமயம் உண்ணா நோன்பு என்ற பெயரில் கருணாநிதி அரங்கேற்றிய நாடகம், தனது மகன், மகள், பேரன் ஆகியோருக்கு அமைச்சர் பதவி கேட்டுத் தில்லியில் தவம் கிடந்த கேவலம் போன்ற காரணங்களுக்காகவே மக்கள் திமுக – காங்கிரஸ் அணிக்கு எதிராகவும் அதிமுக அணிக்கு ஆதரவாகவும் வாக்களித்தார்கள்.

  திமுக வின் ஒரு உரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, 50 ரூபாய் மளிகைப் பொருட்கள், பொங்கல் பை, இரண்டு ஏக்கர் நிலம், மகளிர் சுய உதவிக் குழுக்கள், இலவச சிமெந்து வீடு, அவசர வைத்தியத்துக்கு 108 நோய்காவு வண்டிகள், தொலைக்காட்சி, கிரைன்டர், மிக்சி, கிழமைக்கு 5 முட்டைகள் போன்ற இலவசங்கள் எதுவுமே அந்தக் கட்சியைக் கரை சேர்க்க உதவவில்லை.

  எனவே அதிமுக அணிக்கு விழுந்த வாக்குகள் திமுக அணிக்கு எதிரான வாக்குகள் என்று சொல்வதே சரியாக இருக்கும்.

  கேரள நாட்டு வாக்காளர் போல் தமிழக வாக்காளர்களும் தங்கள் தலையிடிக்குத் தலையணையை மாற்றி வருகிறார்கள் போலத் தெரிகிறது. மறைந்த புரட்சித் தலைவர் எம்ஜிஆர் ஒருவராலேயே அடுத்தடுத்து மூன்று முறை ஆட்சியைப் பிடிக்க முடிந்தது. கருணாநிதியாலும் சரி உங்களாலும் சரி அப்படியான சாதனையைச் செய்ய முடியவில்லை.

  2001 -2006 இல் ஆட்சிக் கட்டிலில் இருந்த உங்களை மக்கள் நிராகரித்தார்கள். அதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை என்று தேர்தல் முடிவுகள் வந்த பின்னர் ஜெயா தொலைக்காட்சிக்குக் கொடுத்த நேர்காணலில் சொன்னீர்கள். ஆனால் நீங்கள் 2006 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் தோற்றதற்குத் தக்க காரணங்கள் இருந்தன.

  ஊடகங்களின் மீதான நெருக்குவாரம், ஒரே நாளில் 200,000 அரச ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பியது, காவல்துறை மூலம் அரசியல் எதிரிகளையும் மற்றவர்களையும் கைது செய்து சிறையில் தள்ளியது, தமிழ்த் தேசிய உணர்வாளர்களைப் பொடா சட்டத்தில் கைது செய்து 18 மாதங்கள் சிறையில் அடைத்து அழகு பார்த்தது, மதமாற்றச் சட்டம், அமைச்சர்களை மாதம் ஒருமுறையாவது பந்தாடியது, சொத்துக்களை வாங்கிக் குவித்தது போன்ற குற்றச்சாட்டுக்களைக் குறிப்பிடலாம்.

  உங்களிடம் இருப்பது அசாத்தியத் துணிவு. எடுத்த காரியத்தை முடிக்கும் ஆள்வினை. இல்லாதது பணிவு. ” பணியுமாம் என்றும் பெருமை சிறுமை அணியுமாம் தன்னை வியந்து” என்பது வள்ளுவர் வாக்கு. அதாவது பெருமை உடையவர் செருக்கு இல்லாமல் பணிவுடன் இருப்பர். சிறுமை உடையவரோ செருக்குடன் தம்மைத் தாமே வியந்து பாராட்டுவர்.உங்களது ஆட்சி நல்லாட்சியாக அமைய உங்களுக்கு இன்னொரு குறளையும் இந்த இடத்தில் நினைவு படுத்த விரும்புகிறோம்.

  இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
  கெடுப்பா ரிலானுங் கெடும். (பெரியாரைத் துணைக்கோடல் – குறள் 448)

  கடிந்து அறிவுரை கூறும் பெரியாரின் துணை இல்லாத காவலற்ற அரசன் தன்னைக் கெடுக்கும் பகைவர் எவரும் இல்லாவிட்டாலும் கெடுவான்.

  முன்னாள் முதல்வருக்கு இதுதான் நடந்தது. இடித்துச் சொல்வதற்கு யாரும் இருக்கவில்லை. அவரைச் சுற்றி காலை, மாலை போற்றிபாடும் – அவர் எதைக் கேட்க விரும்புகிறாரோ அதைச் சொல்லும் – ஒரு காக்காய் கூட்டந்தான் இருந்தது.

  எனவே மாற்றுக் கருத்துக்கு இடங்கொடுங்கள். ஊடக சுதந்திரத்துக்கு இடம் கொடுங்கள். சட்டத்தின் ஆட்சி என்ற கோட்பாட்டைக் கண்டிப்பாகக் கடைப்பிடியுங்கள். எழைகளுக்கு ஒரு நீதி பணக்காரர்களுக்கு ஒரு நீதி என்ற அநீதியை ஒழியுங்கள்.

  பட்டப் பகலில் ஒன்றுக்கு மூன்று கொலைகளைச் செய்து விட்டு சட்டத்தின் ஓட்டைகள் வழியாக வெளியே வந்தவர்களை மீண்டும் நீதியின் முன் நிறுத்தித் தண்டனை வாங்கிக் கொடுங்கள்.

  தமிழ்மொழி செழித்து வாழ தமிழில் அரச நிருவாகம், தமிழில் நீதிமன்ற விசாரணை, தமிழில் கோயில் வழிபாடு, அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகும் உரிமை ஆகியவற்றை நடைமுறைப் படுத்துங்கள். குழந்தைகளுக்குப் பெற்றோர்கள் தூய தமிழ்ப் பெயர்களை வைக்க வேண்டும் என்று சட்டம் இயற்றுங்கள். இரட்டைத் தம்ளர் முறையை ஒழித்துக் கட்டுங்கள். ஊரைப் பிரிக்கும் சாதிச் சுவர்களை இடித்துத் தள்ளுங்கள்.

  இவற்றை நீங்கள் செய்தால் உங்கள் ஆட்சி நல்லாட்சியாக மட்டுமல்ல பொற்கால ஆட்சியாகவும் அமையும் என்பதில் அய்யமில்லை. மீண்டும் வாழ்த்துக்கள்.

  அன்புடன்

  நக்கீரன்
  தலைவர்
  தமிழ்ப் படைப்பாளிகள் கழகம்

 31. rohan says:

  thank you,we are waiting our caption

Leave a Reply