Thursday December 12th 2019

Archives

இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவியேற்பு; சமலுக்கு பாதுகாப்பு, தயாசிறிக்கு கைத்தொழில்!

கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் தற்போது (இன்று புதன்கிழமை) இராஜாங்க அமைச்சர்களும், பிரதி அமைச்சர்களும் பதவியேற்று வருகின்றனர்.

ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறும் பதவியேற்பு நிகழ்வில் இதுவரை இராஜாங்க அமைச்சர்களாக பதவியேற்றவர்கள் விபரம்,

1. சமல் ராஜபக்ஷ – பாதுகாப்பு
2. வாசுதேவ நாணயக்கார – நீர் வழங்கல் வசதிகள்
3. காமினி லொக்குகோ – நகர அபிவிருத்தி
4. மஹிந்த யாப்பா அபேவர்தன – நீர்பாசன, கிராமிய அபிவிருத்தி
5. எஸ்.பீ. திஸாநாயக்க – காணி மற்றும் காணி அபிவிருத்தி
6. ஜோன் செனவிரத்ன – பொருளாதாரம், கொள்கை அபிவிருத்தி
7. சீ.பீ. ரத்னாயக்க – புகையிரத சேவைகள்
8. லக்ஷமன் யாப்பா அபேவர்தன – தகவல் தொலைத் தொடர்பு, தொழில்நுட்பம்
9. சுசந்த புஞ்சிநிலமே – சிறிய மற்றும் நடுத்தர தொழிற்துறை
10. அநுர பிரியதர்ஷன யாப்பா – உள்ளக வர்த்தக மற்றும் பாவனையாளர் நலன் ஓம்புகை
11. சுசில் பிரேம்ஜயந்த் – சர்வதேச ஒத்துழைப்பு
12. பிரியங்கர ஜயரத்ன – சுதேச வைத்திய சேவைகள்
13. ரஞ்சித் சியம்பலாபிடிய – கல்விச் சேவைகள்
14. மஹிந்தானந்த அலுத்கமகே – மின்சக்தி
15. துமிந்த திசாநாயக்க – இளைஞர் விவகாரம்
16. ரோஹித்த அபேகுணவர்தன – மின்வலு
17. தயாசிறி ஜயசேகர – கைத்தொழில்
18. லசந்த அழகியவண்ண – அரச முகாமைத்துவ கணக்கீடு
19. கெஹெலிய ரம்புக்வெல்ல – முதலீட்டு மேம்பாடு
20. அருந்திக பெர்ணான்டோ – சுற்றுலா மேம்பாடு
21. திலங்க சுமதிபால – தொழில்நுட்ப புத்தாக்கம்
22. மொஹான் பிரியதர்ஷன – மனித உரிமைகள் சட்ட சீர்திருத்தம்
23. விஜித பேரகொட – மகளிர், சிறுவர் அலுவல்கள்
24. ரொஷான் ரணசிங்க – மஹாவலி அபிவிருத்தி
25. ஜானக்க வக்கும்பர – ஏற்றுமதி கமத்தொழில்
26. விதுர விக்ரமநாயக்க – கமத்தொழில்
27. ஷெஹான் சேமசிங்க – அபிவிருத்தி வங்கிகள், கடன் திட்டங்கள்
28. கனக ஹேரத் – துறைமுக அபிவிருத்தி அலுவல்கள்
29. திலும் அமுனுகம – போக்குவரத்து சேவைகள் முகாமைத்துவம்
30. லொஹான் ரத்வத்த – நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி
31. விமலவீர திசாநாயக்க – வனஜீவராசிகள் வளங்கள்
32. ஜயந்த சமரவீர – சுற்றாடல்
33. சனத் நிஷாந்த பெரேரா – கடற்தொழில் மற்றும் நன்னீர் மீன்பிடி
34. தாரக பாலசூரிய – சமூக பாதுகாப்பு.

பிரதி அமைச்சர்கள் விவரம்;
1. நிமல் லங்சா – சமூதாய வலுவுட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு
2. காஞ்சன விஜயசேகர – கடற்தொழில் மற்றும் நீரக வளமூலங்கள்
3. இந்திக்க அநுருத்த – பொது நிர்வாகம், உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி

Leave a Reply