Sunday January 19th 2020

Archives

பிரதமரை ஜனாதிபதியால் பதவி விலக்க முடியும்: சுதந்திரக் கட்சியின் 16 பேர் குழு

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் பதவிவிலக்க முடியும் என்று அரசாங்கத்திலிருந்து விலகியுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 16 பேர் கொண்ட அணி தெரிவித்துள்ளது.

சிங்கள மொழியிலுள்ள அரசியலமைப்பின் 19வது திருத்தத்தில், பிரதமரைப் பதவி விலக்குவதற்கான அதிகாரம், ஜனாதிபதியிடம் காணப்படுவதாகவும் அந்த அணி சுட்டிக்காட்டியது.

அரசியலமைப்பின் 19வது திருத்தத்தை பயன்படுத்தி, பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்கவை நீக்கவேண்டும் என்று அந்த அணி வலியுறுத்துகின்றது.

கொழும்பில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த அந்த அணியின் பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேராவே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

Leave a Reply