Sunday May 31st 2020

Archives

படகு மூழ்கி காணாமல் போன இலங்கையர்களை தேடும் பணிகள் கைவிடப்பட்டுள்ளன

refugees_australiaபடகு மூழ்கி காணாமல் போன இலங்கையர்களை தேடும் பணிகளை அவுஸ்திரேலியா கைவிட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மூழ்கிய படகு கிழக்கு பிரதேசக் கடலில் இருந்தே புறப்பட்டுள்ளதென வெளியாகியுள்ள தகவலை இலங்கை கடற்படை மறுத்துள்ளது.

அவுஸ்திரேலியாவிற்குள் தஞ்சம் அடையும் நோக்கில் பயணித்த இலங்கை அகதிகளைக் கொண்ட படகு ஒன்றே இவ்வாறு விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

இந்தப் படகில் பயணித்த 12 பேர் காணாமல் போயுள்ளதாகவும், 27 பேர் உயிருடன் காப்பாற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காப்பாற்றப்பட்ட 27 பேரும் கிறிஸ்மஸ் தீவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் அறியவருகின்றது.

நிலவும் மோசான காலநிலையின் காரணமாக மீட்புப் பணிகள் கைவிடப்பட்டுள்ளதாகவும், இனி எவரும் உயிருடன் இருக்க வாய்ப்பு இல்லை எனவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மொத்தமாக 39 பேர் இந்த படகில் பயணித்திருக்கக் கூடும் எனவும் இதில்  மூன்று  பேரது சடலங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அவுஸ்திரேலியாவில் மூழ்கிய கப்பல், கிழக்கில் இருந்து புறப்படவில்லை

அவுஸ்திரேலியாவின் வடமேற்கு கடலில், மூழ்கிய கப்பலில் சென்றவர்கள், இலங்கையின் கிழக்கு பிரதேசத்தில் இருந்து புறப்படவில்லை என இலங்கையின் கடற்படை தெரிவித்துள்ளது.

இலங்கையின் கடற்படை மற்றும் பொலிஸாருக்கு தெரியாமல், இவர்கள் அவுஸ்திரேலியாவுக்கு கிழக்கில் இருந்து புறப்பட்டிருக்க முடியாது என கடற்படையின் பேச்சாளர் கப்டன் அத்துல சேனரத் தெரிவித்துள்ளார்.

குறித்த கப்பலில்,சென்றவர்கள், இலங்கையின் கிழக்கு கடலில் இருந்தே சென்றார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தநிலையிலேயே குறித்த மறுப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த கப்பலில் பயணித்த 39 பேரில் 27 பேர் காப்பாற்றப்பட்டனர். மூன்று சடலங்கள், மீட்கப்பட்டுள்ள நிலையில் தேடுதல் பணிகள் கைவிடப்பட்டுள்ளன.

Leave a Reply