Saturday January 18th 2020

Archives

தமிழ்நாடு சட்டமன்றத்தில் பிரபாகரனை அரசியலாக்கும் இரு பிரதான கட்சிகள்!

annaiஎல்லாப் பிரச்சனைகளுக்கும் இரண்டு பக்கம் இருக்கின்றன என்பார்கள். தமிழ்நாட்டு சட்டசபைக்குள் இரண்டு கட்சிப் பிரச்சனையும் இருவர் மட்டில் எழும் பிரச்சனையும் தான் எல்லாப் பிரச்சனைகும் பெரும் பிரச்சனையாகி விட்டது.

எல்லாப் பிரச்சனைகளும் சரிவந்தாலும் அ.தி.மு.கவும் – தி.மு.க.வில் ஏற்படும் பிரச்சனைகள் ஒத்துவருவதாக எந்தக் கட்டத்திலும் காலத்திலும் நடைபெறப் போவதில்லை. சிரிப்புத்தான் பெண்மைக்கு அழகு அகத்தின் அழகுதான் ஆண்மையின ஆளுமைச் சிறப்பின் அழகு இரண்டு திராவிடக்கட்சித் தலைவர்களிடம் இவை இரண்டும் சிறிதளவேணும் இல்லை:

ஒன்று கருணாநிதி இரண்டாவது ஜெயலலிதா மூன்றாவது பக்கம் யார் வெல்வது தோற்பது என்ற நிலையில் முழிபிதுங்கி செய்வதறியாத தமிழ் மக்கள். நாலாவது பக்கம் புதிர் நிறைந்த பக்கம் சர்ச்சைகளை கிள்ளிவிட்டு வேடிக்கை பார்க்கும் கேடுகெட்ட அரசியல் அநாகரிகக் கட்சித் தலைவர்கள்.

அறிவையும் அரசியலையும் சுருக்கி தொலை நோக்கற்ற சிந்தனைத் தெளிவும் மாற்ற வெளிப்பாடுமின்றி விமர்சனங்களால் தோய்த் தெடுக்க நினைக்கும் குறுகிய மாற்றுக் கட்சியினர். இவர்கள் எல்லாக் கருத்துக்களாலும் இரண்டு சண்டைக்கார முகங்களைத் தலைவர்களுக்கும் தீர்வுப் பக்கத்தைக் கூறாது திட்டித் தீர்த்து குறுகிய குழப்பவாதிகளாகக் குறுகிக் கொள்பவர்கள்

தி.மு.கழகத்திலிருந்து அ.தி.மு.கழகம் பிறந்த போதே விரோதமும் சண்டை சர்ச்சைகளும் கூடவே ஒட்டிப் பிறந்து நாற்மெடுத்தது. கழக கண்மணிகள் என்ற வார்த்தையில் அநாகரிகமான அரசியல் அராஜகத்தை அதிகமாகச் செய்தவர் கலைஞர் கருணாநிதி. தொண்டர்களைத் தூண்டிவிட்டு வார்த்தை மாயமாலம் காட்டி கட்சியக் காடைத்தனமாக நடத்தினார் என்பதை தமிழகத்தில் இன்னைய தலைமுறை அறிந்து அருவருப்பானவர் முகத்தைப் வெறுத்துப் பார்க்கின்றனர்.

16.06.2016 ஆளுநர் உரையுடன் தொடங்கிய அதனை அடுத்து நடந்த அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் நடந்து கொண்டிருக்கும் அமளியில் இருகட்சியினரும் அதிகம் பிரபாகரன் பெயரையும் ஈழத்தமிழர் பிரச்சனைகளையும் பிரச்சனையாகவே ஆக்கின்றனர்: தி.மு.க.வினர் பிரபாகரன் பெயர் சட்டசபையில் எழுப்புவது எதற்காக என்பதை தமிழர்கள் கவனத்தில் கொள்வது நல்லது தகுதியே இல்லாதவர்கள் தேவையற்ற விவாதங்களை விலக்குவது அவர்களுக்கும் நல்லது.

1989ல் முதல்வர் கருணாநிதி 25.மார்ச் 1989 சட்டமன்றத்தில் ஜெயலலிதாவிற்கு ஏற்பட்டது என்ன? சட்டப்பேரவையில் எழுந்து நின்றவர் கலைஞரின் நிதிநிலை அறிக்கை வாசிக்கவிடமாமல் தடுத்தார் ஜெயலலிதா கையில் வைத்திருந்த நிதிநிலை அறிக்கையைப் பறித்து கிழித்தபோது தி.மு.க – அ.தி.மு.க உறுப்பினர்களிடையே அடிபிடி தொடங்கியது

ஜெயலலிதாவின் சேலை இழுக்கப்பட்டு அவரது கூந்தல் கலைக்கப்பட்டு மிகப் படுமோசமான வதைப்பு பரிந்தவர்கள் கலைஞரின் ஏவலாளிகள்தான் இந்தவகையாக நடந்ததை எப்படி ஜெயலலிதாவாலும் அவர்கட்சி உறுப்பினர்களாலும் இக்காலம்வரை மறக்கமுடியவில்லை. இந்த அநாகரித்தின் உச்சம் வேறுவடிவத்தில் இந்தச் சட்டமன்றத்தில் நடக்கும் கருணாநிதி 93 வயதில் கோட்டைக்கு வந்தால் அந்த அநாகரிகக் கூத்தையும் வெகுவிரைவில் பார்க்கலாம்.

இரண்டு அணிகளாலும் சட்டசபை அடிக்கடி போர்க்களமாகும் காரணம் 1996களில் தொடுக்கப்பட்ட வழக்குகள் தமிழக முதல்வராக இருந்து கருணாநிதி காட்டிய வன்மத்தில் கொடும்பாதகத்தால் ஜெயலலிதா கண்ட சிறையும் ஏறியிறங்கிய நீதிமன்றப் படிகள் பரிதாபநிலையில் அனுபவித்த துன்பத்தில்தான் தனக்கொரு காலத்தை கண்டிருந்தார்.

2001 வந்து சேர்ந்தது சபதத்தின் சாதனையில் கோட்டைக்கு நுழைந்ததும் கருணாநிதியப் பழி தீர்க்கும் படல ஆரம்பம்.; கலைந்த கூந்தலை முடிக்கும் காலம் வந்தது ஆரம்பமானது பழிக்குப்பழி. கருணாநிதிக்கு 80 வயது இருந்தபோதே காவல்துறைறையை விட்டு கருணாநிதிய வீட்டில் வைத்து கைது செய்து சிறையில் அடைத்தார். கருணாநிதி எதற்கெடுத்தாலும் கூறும் பதிலுக்குப் பதில்களைச் சிறைக்கம்பிகளோடு புலம்பிக் கலங்க வைத்தார்.

இதைபபற்றிய உணர்வு இந்தத் தலைமுறைக்குத் தேவையில்லை நடப்பவை பற்றியதை யோசிக்க வேண்டும். ஜெயலலிதாவும்-கருணாநிதியும் வரமுறையற்ற கருத்துக்களை அள்ளிவீசி தமிழர்கள் தலைமுறையினரைச் வழிதவறி நடக்கவே உடந்தையாகி விடுகின்றனர் என்பதைச் சிந்தித்தால் எல்லாக் குறைகளும் விளக்கப்பட்டு தமிழக அரசியல் ஒழுங்குக்கு வந்துவிடும். தமிழர்கள் அறமும் நெறியும் நசுக்கி நொருக்கிச் சாகடித்து விடும் வித விதமான தோற்றப்பாடு தோன்றிவிட்டது கீரியும் பாம்பும் சண்டை காணாத கண்களுக்கு இனி வேடிக்கை வினோதங்கள் வாடிக்கையாகிவிடும்.

16.06.2016 சட்டமன்றம் ஆளுனர் ராசையாவின் பேச்சோடு சட்டசபை அமர்வில் தொடங்கியது வாய்சண்டை “பிரபாகரனை கைது செய்யச் சொன்னவர் ஜெயலலிதான் என்கிறார் எதிர்கட்சித் தலைவர் அவருக்கு விளங்கவில்வை பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கழுத்தறுத்தது யார் என்று. ஜெயலலிதா தலைவரை கைதுதான் செய்யச் சொன்னார் தமிழினக் காவலன் முதலமைச்சாராக இருந்த கருணாநிதி ஈழத்தமிழரை நம்பவைத்து கழுத்தறுத்தல்லவா கொன்றார்.

இந்தவேளையில் தங்கத்தலைவன் எம்.ஜி.ஆர் கூறியது “உணர்ச்சி அவ்வப்போது வந்து போய்விடும் .உணர்வுதான் நினைவு இருக்கும் வரை இருக்கும் அந்த உணர்வு இருக்க வேண்டும் என்றார்.

இந்த இடத்தில் அ.தி.மு.காவின் தலைவர் எம்.ஜி.ஆர் 1982 மே 24 சென்னை பாண்டிபஜாரில் பிரபாகரனுக்கும் முகுந்தனும் மோதிக் கொண்டபோது இருவருடன் பலரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்தபோது சிங்களக் காவல்துறை தங்களிடம் ஒப்படைக்க வற்புறுத்தியது இந்தநேரத்தில் சட்டசபையில் 20 கட்சிகள் ஒன்றிணைந்து எடுத்த தீர்மானம் இச்சமயத்தில் நினைத்தால் எம்.ஜி.ஆர்தான் தெய்வமென வணங்குவோம். பிரபாகரனையும் காப்பாற்றி விடுதலைப் புலிகள் விடுதலைப் போராட்டத்தையும் உயிரிகொடுத்து வளர்த்த புரட்சித் தலைவர் என்பது உயர்வே.

இங்கு பழ.நெடுமாறன் கூறக் கேட்போம்–எம்.ஜி.ஆர்- என்ன உங்கள் நண்பரை பத்திரமாக அனுப்பி விட்டீர்கள் போல இருக்கிறது என்று அவருக்கே உரித்தான மோகனச் சிரிப்பைச் சிந்தினார். நானும் சிரித்துக் கொண்டே தலையசைத்தேன். அவர் சிரிப்பின் அர்த்தங்களைப் புரிந்து கொண்டேன்.

பிரபாகரன் தப்பிச் செல்ல உதவியதாக என் மீதோ தமிழகத்தில் எஞ்சியிருக்கும் விடுதலைப் புலிகள் மீதோ காவல்துறை எந்தவித நடவடிக்கை எடுக்காமல் இருந்த மர்மத்தை அவருடைய சிரிப்பு அம்பலப்படுத்தியது முக்கியமான வேலையோ அல்லது அவசரமான பணியோ இல்லாமல் பிரபாகரன் நாடு திரும்பியிருக்க மாட்டார். அவர் பத்திரமாகப் போய்ச் சேர்ந்து விட்டதாக செய்தி வந்துவிட்டது மகிழ்ச்சி .என முதல்வர் எம்.ஜி.ஆர் கூறினார்.

இதுமட்டுமா விடுதலைப் புலிகளுக்கு அளப்பரிய உதவிகள் பிரபாகரன் தப்பிச் சென்ற வழியையும் நினைக்க வேண்டும். அதுமட்டுமல்ல இனிமேல் யார் கேட்டலும் எவ்விதமான பதிலையும் சொல்ல வேண்டியதில்லை அதை நான் பார்த்துக்கொள்கிறேன்”. என்றார் அவர்தான் புரட்சித்தலைவர் எம்.ஜிஆர்

பிரபாகரனைப் பொறுத்த இந்த உறுதியான ஆதரவை அவர் இறுதிவரை மாற்றிக்கொள்ளவில்லை இத்தகை தலைவர் வளர்த்த கட்சி அ.தி.மு.க.தான் ஜெயலலிதா சங்கடமான நேரத்தில் கூறிய சிறுகுற்றச் சொல் பாதிப்பில்லை..கருணாநிதி இனத்தை அழித்து விடுதலையை வென்றெடுக்கும் பாதையையே நீறாக்கியவரல்லவா:

93 வயதிலும் ஒதுங்காமல் பதவியும் பணப்பேராசை மோசடிகளில் சதா உணர்வற்று உளறவைத்துக் கொண்டிருக்கும் கருணாநிதியின் வாழ்க்கை ஒட்டத்தின் ஆட்டத்தை எம்.ஜீ.ஆர் மட்டில் காட்டமுடியாத கட்டம் அந்த வேகம் ஜெயலலிதாவிடமும் ஓடப்பார்த்தது முடியாது வேகம் தடைபட்டது எத்தனை தலைகளை வீழ்த்திய நஞ்சனின் பாச்சல் துணிவுக்கும் துணைக்கும் 93 வயதிலும் ஒட்டிநிற்பது என்னவகையான பாதை என்பதுதான் வியப்பைத் தருகிறது..

மோசடிகளையும் ஏமாற்றங்களையும் புரிவதற்காவே வாழ்க்கைப் பணியாக ஏற்று முழு மூச்சாகச் செயல்பட்டவர் கருணாநிதி என்றுதான் தலைமுறை சொல்லும். குடும்ப வாழ்வென 93 வயதிலும் வாழும் பதவி ஆசையை விட்டு ஓதுங்குமா கிழம்.?.

சாடிக்கேற்ற மூடிகளாக வாச்சிருக்கும் ஒட்டுண்ணிகள் நல்ல நோக்கத்தைப் புகுத்தாது பூசல்களைப் புகுத்திச் சிதைத்விடப் பின்பக்கம் நின்று நாறடிக்கக் கத்துபவர்களாகத்தான் நிற்கிறார்கள். இருவரிடமும் வளர்ந்து கொண்டிருக்கும் பிரச்சனைகள் தீராத பிரச்சனையாக்தான் பிரதிபலிப்பது. இரு திராவிடக் கட்சிகளின் கொள்கை நீதி இனி சட்டசபையில் எடுபடாது

பிரான்சிலிருந்து கவிஞர் கிறிஸ்ரியன் கட்டுரையில் குறிப்பிட்டது போல “கண்ணுக்கெட்டிய தூரம் வரை எதிரிகளே இல்வை என்றவர் காலடியில் விசப்பாம்புகள்”” தொடங்கிவிட்டது படமெடுத்தாட இது முடிவில்லாத தொடர்கதைதான். இன்னுமொரு கட்டியக்காரன கூற்று கருணாநிதிக்கு இருக்கை வசதி செய்து கொடுத்தால் சட்டசபைக்கு வருவாராம். வந்தால்தான் என்ன இருக்கை வராவிட்டால் சக்கர நாற்காலியுடன் வந்திருக்க வேண்டியதுதானே:

கருணாநிதி குரைப்பதை விளங்கப்படுத்த இரண்டு மொழிபெயர்பாளர்கள் தேவை கறுப்புக் கண்ணாடி துடைக்க ஒருவர் மஞ்சள் துண்டை ஒழுங்குபடுத்த ஒருவர் நாலு பேர் கூடவே பக்கத்தில் நிற்க வேண்டும் இது தேவைதானா? 93 வயது ஓதுங்கமாடடெங்குது பேராசை: தமிழ் மக்களின் தேவைகளும் அவர்களது உணர்வுகளின் பரபரப்பும் கருணாநிதி இனி அறியமாட்டார். அரசியலில் எப்படி வாழ்ந்தாரோ எப்படித் தமிழினத்தையே படுகொலை புரிய உடந்தையாக இருந்தாரோ அதே கனவைக் காண்பதிலேயே 93 வயதிலும் இருக்கிறார். இந்தியாவில் 11வது கோடிஸ்வரப் பணப்பேய்கள் பட்டியலில் இருப்பவர் எப்படி விட்டு அதுங்க முடியும்? சட்டமன்றம் வந்து சச்சரவு கைதட்டல் கத்தல் பலப்பல கூத்துக்களுக்கு உந்தலாக இருந்து பழக்கப்பட்ட அனுபவம் அதிசய சாதனையை நிகழ்த்த துடிக்கிறது கிழம்.

இன்றைய நிலையில் கருணாநிதி நேருக்கு நேர்பட்டால் ஜெயலலிதாவின் ஆத்திர ஆவேசம் அதிசயத்தை அச்சடிக்கும். அது எப்படியிருக்கும் என்பதைப் வெகுவிரைவில் காணலாம். இந்த இருகட்சிகளுக்கு தீர்வுக்குரியதும் தமிழகமக்கள் தேவைக்குரிய தீர்மானங்கள் ஒத்துப் பொருந்துவதாகவும் எதுவும் வரப்போறதில்லை. இருவரிடையும் அதிருப்தி அகன்று நிலையான திருப்தி ஏற்படப் போவதில்லை. தமிழகமக்கள் தேவையின் விருத்திக்கும் இரண்டு கட்சியினரிடையே வாய்ப்பு ஏற்படும் என்பதும் சாத்தியமில்லை.

கருணாநிதி சட்டசபைக்குள் சக்கர நாற்காலியில் இருத்தியே தள்ளிக்கொண்டு வந்துவிட்டாலும் இரும்புப்பெண் ஜெயலலிதா அஞ்சிடப் போவதில்லை: மாறாக தனித்திருந்து கருணாநிதிதான் ஏன் வந்தேன் இந்தநரகத்திதினுள் என்று கடைசிக்காலத்தில் “ஆப்பிலுத்த குரங்கின் நிலையில்”அவமானப்பட நேரிடும். சந்தேகம் வளர வளர இருவரது சுயரூபமும் அதிகமாகத் தெரியவரும். இனிமேல் என்னைத் தெரியுமா? கருணாநிதி கேட்க..விட்டாலும் பின்னால் நின்று கத்தும் கும்பல் தட்டடிக் கேட்கும்.அமளியும் சண்டையும் நடைபெறும் சட்டமன்றம் உலகத்தின் கேலிச்சித்திரத்தில் சித்தரிக்கப்படும்.

உன்னை நான் தெரிந்து எனக்கு என்ன வரப்போகிறது? என்று கேட்கக் கேட்க அரசியலைத் துறக்கவும் வெறுக்கவும் வைக்கும் மக்கள் எதை எதை எதிர்பார்த்து பெரிதாக நினைதிருந்தார்களோ அவற்றையெல்லாம் விட்டு விட்டு வெளியே நின்று “கீரியும் பாம்பின்” சண்டையத்தான் வேடிக்கை பார்த்துச் சிரிக்கப் போகின்றார்கள். “ இருவரதும் சுயமான உந்தல்களால் எழும் உருவாகும் சுயமன குறுகிய குற்றயுணர்வும் பழிவாங்கும் நோக்கமும் நேருக்கு நேர்பார்த்து பேசாத வெறுப்புத் குரோதமும் உள்ளுணர்வுக் கோபத்தைச் சினத்தை இனித்தான் அதிகம் மூட்டும்.

தூண்டித் தாண்டிப் பாய இருவரும் தலைமை தாங்கும் கட்சிக்காரர்களாலும் உணரமுடியாது தலைமுறை எல்லாத்தளத்திலும் ஏறிநின்று உரக்கப் பேசத் தொடங்க வேண்டும். உண்மைகளும் உடனுக்குடன் தொழில் நுட்பங்கள் மூலம் வெளிவரும் குணத்தில் அறிவு அன்பு சமத்துவம் சகோதரத்துவ சமதர்ம வீச்சின் பொதுவுடமைப் போக்கின் பெரும்தளத்தில் மேல்போக்கில் தலைமுறைப் பாச்சல் காணவேண்டும். இவர்களால்தான் இவ்விரு வழியும் கல்லாயுகத்திற்குள் செல்லவிடாது மாற்றமும் மனமாற்றமும் ஏற்படுத்த முடியும்

கோட்டை நாற்காலி அமர்வு மக்கள் தேவைக்கான நற்காரியம் ஆற்றத்தான். உங்கள் பகைமையைக் காட்டவல்லது அல்லயென்பதைக் காலஅனுபவம் கூடவா கலைஞருக்குக் கிடைக்கவில்லை கருணாநிதி சுத்தப் பனியனா? அல்லது பணப் பைத்தியமா? இருப்பது காணும்தானே மெல்ல 93 வயதில் பேசாம ஓதுங்கலாம் .ஓதுங்கமாட்டார் நாம்தான் ஒதுக்க வேண்டும். இல்லை ஈழத்தமிழர்களைப் படுகொலை புரிந்த சாபமும் சபதமும் ஒதுக்க வேண்டும்.

Leave a Reply