Sunday May 31st 2020

Archives

நோர்வேயில் நடைபெற்ற தமிழ்ச்செல்வன் உட்பட்ட விடுதலை வீரர்களின் 2ம் வருட நினைவு வணக்க நிகழ்வு

DSC_0815-1தமிழ் மக்களின் இதயங்களில் விடுதலை ஒளிபரப்பி நீங்காத நினைவுகளாய் வாழ்கின்ற விடுதலை வீரர்களின் நினைவு சுமந்து நோர்வே ஒஸ்லோவிலும் வீரவணக்க நிகழ்வு 02.11.2009 திங்கட்கிழமை அன்னை பூபதி றொம்மன் வளாகத்தில் மலை 6 மணிக்கு நடைபெற்றது.
1984 இல் தேச விடுதலைக்கான பணியில் தன்னை விடுதலைப் போராளியாக இணைத்துக் கொண்ட பிரிகேடியர் சுப தமிழ்ச்செல்வன் அவர்கள் 1987 இல் தென்மராட்சி கோட்டப் பொறுப்பாளராகவும் 1991 இல் யாழ் மாவட்டத் தளபதியாகவும் போர்க்களங்களில் எதிரி படைகளுக்கு சிம்ம சொர்ப்பனமாக விளங்கினார்.

பின்பு 1993 இல் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளராக தேசியத் தலைவர் அவர்களால் நியமிக்கப்பட்டு சிறந்த முறையில் தமிழீழத்திற்கான அரசியல் வேலைத்திட்டங்களையும் முன்னெடுத்து வந்ததார்.

அத்தோடு சமாதான காலத்தில் பேச்சுவார்த்தை மேடைகளிலும் அனைத்துலக இராஜதந்தரிகளின் சூட்சுமங்களை விளங்கிக்கொண்டு பேச்சுப்போர் தொடுத்து தமிழ்மக்களின் உரிமையை யாரும் விலை பேசாமல் பாதுகாத்து வந்தார்

பாலா எனும் பல்கலைக்கழகத்தில் அரசியலை கற்றுக்கொண்ட இவர் தேசத்தின் விடிவுக்காக இறுதிவரை இலட்சிய வீரனாகவும் தேசியத் தலைவனின் நம்பிக்கை நட்சத்திரமாகவும் விளங்கினார்.

சிரித்தபடியே உலகமெல்லாம் சென்று தன் இன விடுதலைக்காக சமாதானக் கரம் நீட்டிய இந்த வெள்ளைப் புறாவை அதன் தோழமைகளையும் சிங்களத்தின் கந்தகக் கழுகு கடித்துக் குதறி ஆண்டு இரண்டு ஆகிவிட்டது.

தமிழ் மக்களின் இதயங்களில் விடுதலை ஒளிபரப்பி நீங்காத நினைவுகளாய் வாழ்கின்ற விடுதலை வீரர்களின் நினைவு சுமந்து நோர்வே ஒஸ்லோவிலும் வீரவணக்க நிகழ்வு 02.11.2009 திங்கட்கிழமை அன்னை பூபதி றொம்மன் வளாகத்தில் மலை 6 மணிக்கு நடைபெற்றது.

நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு வீழ்ந்த வீரருக்காய் மலர் தூவி வணக்கம் செலுத்தினர். அத்தோடு நினைவுரைகளும் நினைவுக் கவிதைகளும் விடுதலைப் பாடல்களும் மாவீரர்களின் நினைவுகளைத் தாங்கி ஒலித்தது.

Leave a Reply