Sunday May 31st 2020

Archives

தலைவணங்குகின்றது ஊடகஇல்லம்

maniதமிழீழ மக்கள் துயர் கண்டு கொதித்தெழுந்து
எரிமலையாய்க் குமுறிய இயக்குநர் இதயமே!
தமிழீழக் கனவைச் சுமந்த இதயம்
தமிழன் விடிவையே சுவாசித்த சுவாசம்
இன்று அமைதியாய் அடங்கிவிட்டது.
தன் உடலம் மீது
தமிழீழத் தேசியக் கொடியைப் போற்றுங்கள்
என்று தமிழீழத்தையும்
தமிழீழத் தேசியத் தலைவரையும்
ஆழமாக நேசித்த பொதுவுடமைவாதி!
மணிவண்ணன் – புரட்சியின் மறுபெயர்
மணிவண்ணன் – சுயமரியாதையின் மறுவடிவம்

மணிவண்ணன் அவர்கள் தமிழ்த் திரையுலகத்தில் நல்ல படைப்பாளி.
நல்ல சிந்தனையாளர். பொதுவுடமை தத்துவத்தில் ஆழ்ந்த நம்பிக்கையுள்ளவர்.

தமிழ்த்தேசியத்தை முன்னெடுத்து சென்றவர். ஈழவிடுதலைக்கு முழுமையான
ஆதரவினை வெளிப்படுத்தியவர்.

தமிழகத்தில் நடைபெற்ற போராட்டங்களில்
பங்கெடுத்து தமிழ் உணர்வினை வெளிப்படுத்தியவர்.

இவர் தனது 59வது வயதில்
இன்று 15.06.2013 அன்று மாரடைப்பால் சாவடைந்தார்.

தமிழீழ உணர்வாளர் இயக்குநர் திரு. மணிவண்ணன் அவர்களுக்கு
ஊடகஇல்லம் தன் தலை சாய்த்து வணங்குகின்றது.

அவரை இழந்து நிற்கும் குடும்பத்தாருக்கு இதயபூர்வமான
ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கின்றது.

Manivanna - Mediahouse version2

Leave a Reply