யுத்தத்தால் பெற்றோரை இழந்து செட்டிகுளம் இடைத்தங்கல் முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த முல்லைத்தீவு மாவட்ட சிறுவர்கள் 201 பேர் அரசின் விசேட ஏற்பாட்டின் பேரில் நேற்றுமாலை நாடாளுமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களுக்கு விசேட பிரதிநிதிகளுக்கான கௌரவமும் வரவேற்பும் அங்கு வழங்கப்பட்டது.
இச்சிறுவர்களின் வருகை குறித்து நீதி மற்றும் சட்ட மறுசீரமைப்பு பிரதி அமைச்சர் புத்திரசிகாமணி நாடாளுமன்றத்துக்கு மாலை 4.00 மணியளவில் அறிவித்தார். அவர் அந்தச் சிறுவர்களுக்கு விசேட பிரதிநிதிகளுக்கான கௌரவத்தையும் வரவேற்பையும் வழங்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கேட்டுக்கொண்டார். சிறுவர்கள் சபைக்கு அழைத்து வரப்பட்டபோது ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மேசையில் கை தட்டி விசேட பிரதிநிதிகளுக்குரிய கௌரவத்தையும், வரவேற்பையும் சிறார்களுக்கு வழங்கினர். சிறுவர்கள் நாடாளுமன்றத்துக்கு வருகை தந்தபோது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் பிரசன்னமாகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.