Saturday December 14th 2019

Archives

அரசியல் தஞ்சம் வேண்டுமெனில் கப்பலை விட்டு இறங்குங்கள் – ஐ. நா

Ocean vikingஇந்தோனேஷிய கடலில் ஓசியன் வைகிங் கப்பலில் இருக்கும் இலங்கையர்கள் 78 பேரினதும் அரசியல் தஞ்சக் கோரிக்கைகள் வெற்றி பெற வேண்டுமானால்  அவர்கள் முதலில் கப்பலை விட்டு இறங்கி  கரைக்குவர வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை ஆலோசனை கூறியுள்ளது. இந்த அகதிகள் 78 பேர் சம்பந்தமாக ஆஸ்திரேலியா 24 மணித்தியாலங்களுக்கு இடையில் தீர்வு காணவேண்டும் என்று ஆஸ்திரேலிய அரசுக்கு  இந்தோனேஷியா நேற்றுமுன்தினம் காலக்கெடு விதித்துள்ளது. இந்த நிலையிலேயே ஐக்கிய நாடுகள் சபை இலங்கையர்கள் 78 பேரினதும் அரசியற் தஞ்சக் கோரிக்கைகள் வெற்றி பெற வேண்டுமானால் அவர்கள் முதலில் கரையேற வேண்டும் என்று நேற்று ஆலோசனை கூறியுள்ளது.ஐக்கிய நாடுகள் சபையின் ஆசிய பசுபிக் வலயத்துக்கான பிரதிநிதி ரிச்சர்ட் ரொவ்லே இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார்.

Leave a Reply