Monday April 22nd 2019

இணைப்புக்கள்

Archives

அனுராதபுரத்தில் நான்கு இராணுவத்தினருக்கு மரணதண்டனை

இராணுவம்சிறீலங்காவின் அனுராதபுர நீதிமன்றத்தினால் நான்கு சிறீலங்காப்படையினர் உள்ளிட்ட ஒன்பது பேருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சிறீலங்காப் படையினர் பாலியல் மற்றும் கொள்ளைச் சம்பவங்களில் திறம்பட செயற்படுபவர்கள் என்று கெய்டியில் அமைதி படையாக சென்ற சிறீலங்காப் படையினர் பன்னாட்டிற்கு நிரூபித்து காட்டியுள்ள நிலையில், சிறீலங்காவிலும் இவர்கள் படுமோசமான களவு, பாலியல் பலாத்கார வேலைகளிலும் ஈடுபட்டு வருகின்ற நிலையில் அரசியல் செல்வாக்கினால் மறைக்கப்பட்டு வந்துள்ளன.

இன்நிலையில் சிங்கள மக்கள் அதிகளவு வாழும் அனுராதபுரம் பகுதியில் பல்வேறு கொலை, கொள்ளை, பாலியல், பலாத்காரம் போன்ற வேலைகளில் ஈடுபட்ட சிறீலங்காப் படையினர் அனுராதபுரம் நீதிமன்றில் ஆயர்படுத்தப்பட்டுள்ளார்கள். கடந்த ஒரு மாதகாலப் பகுதியில் அனுராதபுரம் நீதிமன்றத்தினால் 04 சிறீலங்காப் படையினருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இதனைவிட 5 சிங்களவர்களுக்கும் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில்தான் சிறீலங்காப் படையினர் தமிழ் மக்கள் மத்தியில் வாழ்ந்து வருகின்றார்கள். சிறீலங்கா நீதிமன்றங்களில் மரண தண்டனை விதிக்கப்பட்டாலும் அது நடைமுறையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply