Monday April 22nd 2019

இணைப்புக்கள்

Archives

ஐ.நா. மனிதாபிமானத் தலைவர் இலங்கை வருகிறார்

ஜான் ஹோல்ம்ஸ்ஐக்கிய நாடுகள் அவையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான அமைப்பின் தலைவர் ஜான் ஹோல்ம்ஸ் அடுத்த வாரம் இலங்கை வருகிறார்.

இலங்கையின் வன்னிப் பகுதியில் சிறிலங்க இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களை அவர்களின் வாழ்விடங்களுக்குச் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று ஐ.நா. தொடர்ந்து அழுத்தம் கொடுத்துவரும் நிலையில், முகாம் மக்கள் வெளியேற்றப்பட்டு வருவது குறித்தும், அவர்களின் வாழ்விடங்களில் குடியமர்த்துவது குறித்த பிரச்சனைகள் தொடர்பாகவும் சிறிலங்க அரசுடம் ஜான் ஹோல்ம்ஸ் விவாதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வன்னி முகாம்களில் இன்னமும் 1,63,000 தமிழர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை உடனடியாக விடுவிப்பது தொடர்பாக சிறிலங்க அதிபர் மகிந்த ராஜபக்சவிடம் ஹோல்ம்ஸ் பேசுவார்.

இம்மாதம் 17 முதல் 19ஆம் தேதிவரை இலங்கையில் பயணம் செய்யும் ஹோல்ம்ஸ், வன்னி முகாம்களுக்கும், மற்ற பகுதிகளுக்கும் நேரில் சென்று நிலைமையை அறிவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழர்களுக்கு எதிரான இனப் படுகொலைப் போர் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் பிப்ரவரி, ஏப்ரல், மே மாதங்களில் இலங்கை வந்த ஜான் ஹோல்ம்ஸ், போர் நிறுத்தத்தின் அவசியத்தை வலியுறுத்தினார். போர் நிறுத்தப்படவில்லையெனில் முல்லைத் தீவுக் கடற்கரையில் இரத்தக் களறி ஏற்படும் என்று எச்சரித்தது மட்டுமின்றி, கார்டியன் இதழில் ஒரு கட்டுரையும் எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Reader Feedback

2 Responses to “ஐ.நா. மனிதாபிமானத் தலைவர் இலங்கை வருகிறார்”

  1. csjeeva says:

    Hon. Holmes to visit to HOME OF GENOCIDE’s SRILANKA( NAZI camp/IDP’s camp).

    Must action by UN but Not wordy; We had enough promises by GoSL since 1947 until today.

  2. Thanilan says:

    We can’t trust these corrupt/useless UN officials.

    However, we should proceed to our actions

Leave a Reply