Wednesday January 23rd 2019

இணைப்புக்கள்

Archives

தமிழ் மக்கள் சமஷ்டிக் கட்டமைப்பின் கீழ் சுதந்திரமாக வாழ வேண்டும்: சி.வி.விக்னேஸ்வரன்

தமிழ் மக்கள் சகல உரித்துகளுடனும், சமஷ்டி முறையிலான அரசியல் கட்டமைப்பொன்றின் கீழ் சுதந்திரமாக வாழக்கூடிய ஒரு சூழ்நிலை உருவாக வேண்டும் என்று தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

சட்டத்தின் வாயிலாகவும், அரசியலமைப்பு ரீதியாகவும் தமிழ் மக்களுக்குக் கிடைக்க வேண்டிய உரித்துகளைப் பெற்றுக்கொடுப்பதையே, தனது அரசியல் முன்னெடுப்புகளில் முதன்மைப்படுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வவுனியாவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு பேசும் போதே சி.வி.விக்னேஸ்வரன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்நிலை அங்கத்தவர்கள், “கிடைப்பதை எடுப்பதே உசிதம்” என்று வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்குத் எனது நடவடிக்கைகள் விசனத்தை ஏற்படுத்தியிருக்கின்றன என்பதைப் பார்க்க முடிகிறது. எனினும் எனது செயற்பாடுகள், 2013ஆம் ஆண்டு இடம்பெற்ற வடக்கு மாகாண சபைத் தேர்தலின் போது, மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளின் அடிப்படையிலேயே அமைந்திருக்கின்றன. எமது மக்களின் விடிவுக்காக, அவர்களின் வாழ்க்கைத் தர மேம்பாட்டுக்காக, அவர்களுக்கான உரித்துகளைப் பெற்றுக் கொள்வதற்காகவே நாம் பாடுபட்டு வருகின்றோம்.” என்றுள்ளார்.

Leave a Reply