Wednesday July 18th 2018

Archives

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் சர்வதேச வழக்கின் மூலம் தீர்வைப் பெறலாம்: ஜஸ்மின் சூக்கா

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியான புறக்கணிப்பு போக்கை கடைப்பிடிக்குமானால்,

இலங்கைக்கு எதிராக சர்வதேசத்தில் வழக்கொன்றை தாக்கல் செய்வதன் மூலம் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு உரிய தீர்வை பெற்றுக்கொடுக்கலாம் என்று சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்றிட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண அமைச்சர் அனந்தி சசிதரனது அலுவலகத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுடன் ஸ்கைப் மூலம் ஜஸ்மின் சூக்கா மேற்கொண்ட உரையாடலின் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “கடந்த 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி வேறு வழியில்லாமல் இராணுவத்திடம் சரணடைந்த 280 பேரின் பெயர்களும் புகைப்படங்களும் அவர்கள் தொடர்பான விபரங்களும் ITJP என்ற இணையத்தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறான நிலையில் காணாமல்போனோர் அலுவலகம் தனது விசாரணைகளை ஆரம்பிக்கும்போது இவர்களின் நிலைப்பாடு குறித்தும் கவனத்திற்கொள்ள வேண்டும் என நாம் காணாமல் போனோர் அலுவலத்தின் தலைவருக்கு கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளோம்.

அத்துடன் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சாட்சியங்களை நாம் பெறும்போது அவர்களின் பாதுகாப்பு தொடர்பிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும்.

காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியான புறக்கணிப்பு போக்கை கடைப்பிடிக்குமானால் இலங்கைக்கு எதிராக சர்வதேசத்தில் வழக்கொன்றை தாக்கல் செய்வதன் மூலம் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு உரிய தீர்வை பெற்றுக்கொடுப்போம்.” என்றுள்ளார்.

Leave a Reply