Monday May 21st 2018

Archives

இராணுவ வீரர்களை நினைவுகூர அரசாங்கம் தவறிவிட்டது: மஹிந்த

நாட்டுக்காக தமது உயிர்களை தியாகம் செய்த இராணுவ வீரர்களை நினைவுகூர அரசாங்கம் தவறிவிட்டதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியுள்ளார்.

கடுவெல பகுதியில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

“யுத்தத்தின்போது நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த ஒவ்வொரு வீரர்களையும் அதன்போது உயிர்நீத்த மக்களையும் நினைகூர்வதற்கான தினம் மிகவும் அவசியமாகும். ஆனால், அரசாங்கம் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த வீரர்களை கௌரவிக்கவோ நினைவுக்கூரவோ தவறிவிட்டது. ஆகையால் மக்களாகிய நீங்களாவது அவர்களை நினைவுகூர்வதற்கும் போற்றுவதற்கும் மறக்கக்கூடாது.” என்று மஹிந்த ராஜபக்ஷ மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply