கடந்த காலப் பிரச்சினைகளுக்கு தீர்வைக்கண்டு நாட்டை முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்வது அவசியம் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்று புதன்கிழமை கண்டி தலதா மாளிகைக்கு விஜயம் செய்து வழிபாடுகளில் ஈடுபட்ட பிரதமர், அஸ்கிரிய, மல்வத்தை பீடங்களின் மஹாநாயக்கர்களை சந்தித்தார். பின்னர் ஊடகங்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
“இலங்கை இயற்கை அனர்த்தங்கள், இனங்களுக்கு இடையிலான முறுகல் நிலை முதலான பிரச்சினைகளை எதிர்கொண்டது. ஜனாதிபதி இலண்டனிலிருந்து நாடு திரும்பியதும் இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வுகண்டு நாட்டை முன்னேற்ற முடியும்.” என பிரதமர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.