Monday June 18th 2018

Archives

நாட்டை நிர்வகிக்கும் தலைவர்களின் எண்ணிக்கை அதிகரித்தால் குழப்பமே மிஞ்சும்: மஹிந்த

“நாட்டை நிர்வகிக்கும் தலைவர்களின் எண்ணிக்கை அதிகரித்தால் தீர்மானங்களை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்படும். நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள குழப்பங்களுக்கு அதுவே காரணம்.” என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கந்தான பிரதேசத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “நாட்டின் சில பிரதேசங்களில் ஏற்படுகின்ற சில சம்பவங்களால் நல்லிணக்கம் நம்மிடம் இருந்து தூரமாகின்றது. ஒருவகையில் இவற்றுக்கு அரசாங்கமே பொறுப்புக் கூற வேண்டும். இவ்வாறான நிலைமைகள் ஏற்படுவதற்கு காரணம் தீர்மானம் எடுக்க முடியாத நிலையே அல்லது தீர்மானம் எடுப்பதற்கு அளவுக்கு அதிகமானவர்கள் இருப்பதே.

அதேவேளை நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு என்ன நடக்கும் என்பது தொடர்பில் அனைவரும் தெளிவாக உள்ளனர். 04ஆம் திகதி இரவு 09.30 மணிக்கு அதன் பெறுபேறு வெளியாகும்.” என்றுள்ளார்.

Leave a Reply