Monday February 18th 2019

இணைப்புக்கள்

Archives

தமிழீழத் தேசியத் தலைவரின் வாழ்கை வரலாறு திரைப்படமாகிறது!!

தமிழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுக்க இருக்கின்றார் இயக்குநர் ஜி.வெங்கடேஷ்.

இலங்கையில் தமிழீழம் என்ற நாட்டை உருவாக்க கடிமாக உழைத்தவர் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள். இவருடைய வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுக்க இருக்கின்றனர். ‘நீலம்’, ‘உனக்குள் நான்’, ‘லைட் மேன்’ ஆகிய படங்களை இயக்கிய ஜி.வெங்கடேஷ் குமார் இந்தப் படத்தையும் இயக்குகிறார்.

தன்னுடைய ஸ்டுடியோ 18 நிறுவனத்தின் மூலம் வெங்கடேஷ் குமாரே இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். படத்தில் நடிக்கும் நடிகர்கள் விவரம் விரைவில் அறிவிக்கப்பட்டு, படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Leave a Reply