Monday May 21st 2018

Archives

ஐ.தே.க. தலைமைப் பொறுப்பை ஏற்கத் தயாராகுமாறு சஜித்துக்கு ரணில் அறிவுரை!

ஐக்கிய தேசியக் கட்சியின் மிகப் பெரிய பொறுப்பை ஏற்கத் தயாராக இருக்குமாறு அந்தக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு, கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க கூறியதாக தெரிவிக்கப்படுகின்றது.

அண்மையில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்ததாக கட்சியின் உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

கூட்டத்தின் பின்னர் சஜித்திடம் இவ்விடயம் தொடர்பாக ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த சஜித், கட்சியில் ஏகமனதாக எடுக்கப்படும் தீர்மானங்களை ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதாக குறிப்பிட்டார்.

Leave a Reply