Monday July 16th 2018

Archives

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை; வாக்களிப்பது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை: த.தே.கூ

கூட்டு எதிரணியால் (மஹிந்த அணி) பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில் வாக்களிப்பது தொடர்பில் இன்னமும் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக வாக்களிப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாக ஆங்கில இணையதளங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில், இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் கருத்து வெளியிடுகையில், “நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் இதுவரை இறுதித் தீர்மானமும் எடுக்கப்படவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுடைய பாராளுமன்றக் குழு, அடுத்த மாதம் 02ஆம் திகதி, கொழும்பில் சந்தித்து இறுதித் தீர்மானத்தை எடுக்கும். அதுவரைக்கும், கூட்டமைப்பின் நிலைப்பாட்டை அறிவிக்க முடியாது” என்றுள்ளார்.

Leave a Reply