Tuesday March 19th 2019

இணைப்புக்கள்

Archives

தேசிய அரசாங்கம் நிலைகுலைந்து போயுள்ளது: மஹிந்த

தேசிய அரசாங்கம் நிலைகுலைந்து போயுள்ளது என்று முன்னாள் ஜனாதிபதியும், பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வெற்றியால் அரசாங்கம் அதிர்ந்து போயுள்ளது. இந்த நிலையற்ற தன்மை காரணமாக நாட்டினுள் வேறு எதிர்பார்ப்பார்ப்புகள் உருவாகிக் கொண்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வெற்றி பெற்ற பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் பதவியேற்கும் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. அந்த நிகழ்வில் கலந்து கொண்டு பேசும் போதே முன்னாள் ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply