Tuesday November 20th 2018

Archives

சட்டம், ஒழுங்கு அமைச்சு சரத் பொன்சேகாவுக்கு வழங்கப்படும்: ராஜித சேனாரத்ன

“சட்டம், ஒழுங்கு அமைச்சினை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தற்காலிகமாகவே பொறுப்பேற்றுள்ளார். அந்த அமைச்சு விரைவில் முன்னாள் இராணுவத்தளபதியும்,

தற்போதைய அமைச்சருமான சரத் பொன்சேகாவிடம் வழங்கப்படும்” என்று அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சில், இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்தத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர், சரத் பொன்சேகாவை, குறித்த பதவியில் நிறுத்துவதற்கு, பொலிஸ் உயரதிகாரிகள் விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறியுள்ளார்.

Leave a Reply