Saturday December 16th 2017

Archives

ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றச்செயல்கள் ஜனநாயக விரோதமானவை: ரணில்

ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றச் செயல்கள், ஜனநாயகத்திற்கு எதிரானவையாகும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று திங்கட்கிழமை ஆரம்பமான ஊடகவியலாளர்களுக்கு ஏற்படும் வன்முறைகளுக்கு எதிரான சர்வதேச மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

பிரதமர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “இலங்கையின் தற்போதைய அரசாங்கம் நாட்டில் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கு தொடர்ந்தும் நடவடிக்கை எடுத்துவருகின்றது. ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

2005- 2015 காலப்பகுதியில் இலங்கையில் 9 ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். லசந்த விக்ரமதுங்க இதில் ஒருவராவார். மேலும் பல ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. கடத்தல் சம்பவங்களும் இந்த காலப்பகுதியில் இடம்பெற்றுள்ளன.

கடந்த கால ஆட்சியின்போது, ஊடகவியலாளர்களை அச்சுறுத்துவதற்கும், மௌனிக்கச் செய்வதற்கும், குரூரமான வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. சில ஊடகங்கள் அதற்கு ஒத்துழைப்பு வழங்கின.” என்றுள்ளார்.

Leave a Reply