Tuesday July 16th 2019

இணைப்புக்கள்

Archives

கடலில் அந்தரித்த இலங்கையருக்கு அரசியல் தஞ்சம் வழங்க ஆஸி. அரசு இணக்கம்

ஆஸி. அரசுஇந்தோனேஷியா கடலில் கடந்த 25 நாள்களாக அந்தரித்துக்கொண்டிருக்கும் 78 இலங்கையர்களுக்கும் அரசியல் தஞ்சம் வழங்க அவுஸ்திரேலியா கொள்கை அளவில் இணக்கம் தெரிவித்துள்ளது. அவர்கள் அவுஸ்திரேலியாவுக்குள் சட்டவிரோத மான முறையில் பிரவேசிக்க முயன்ற போது இந்தோனேஷிய கடலில் வைத்து அவுஸ்திரேலிய கடற்படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

அவர்கள் கடந்த நான்கு வார காலத்துக் கும் மேலாக இந்தோனேஷிய கடலில் அவுஸ்திரேலியாவின் சுங்கக் கப்பலான “ஓசியானிக் வைகிங்” இல் உள்ளனர். ஆஸ்திரேலியாவில் அரசில் தஞ்சம் கிடைக்கும் வரை கப்பலை விட்டு ஓரடிகூட வெளியில் எடுத்து வைக்கப் போவதில்லை என்று அவர்கள் உடும்புப்பிடியாக இருக்கின்றனர். இவர்களின் எந்தவொரு தந்திரோபாய நடவடிக்கைகளுக்கும் அசைந்து கொடுக்கப் போவதில்லை என்று இதுநாள்வரை ஆஸ்திரேலிய அரசு கடும்போக்கை கடைப்பிடித்து வந்துள்ளது. ஆனால், உள்நாட்டு, அரசியற் கட்சிகள் ஊடகங்கள் பொதுமக்கள் ஆகியோரின் அழுத்தங்கள் காரணமாகவும், சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகளின் அழுத்தங்கள் காரணமாகவும், ஏனைய நாடுகள் இந்த இலங்கையர்களைப் பொறுப்பேற்கத் தயங்குவதாலும் ஆஸ்திரேலியாவின் கடும் போக்கில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்த இலங்கையர்களுக்கு அரசியற் தஞ்சம் வழங்க ஆஸி கொள்கை அளவில் இணங்கியுள்ளது என்று அங்கிருந்து கிடைக்கும் பிந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. அரசியற் தஞ்சம் பெற உரித்தானவர்கள் எதிர்வரும் 12 வாரங்களுக்கிடையில் ஆஸ்திரேலியாவில் அரசியற் தஞ்சம் பெறுவர் என்று ஆஸி. அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இலங்கையர்களுக்கு எழுத்துமூல வாக்குறுதி வழங்கியுள்ளார்கள். இவர்களில் அரசியற் தஞ்சம் பெற உரித்தானவர்கள் என ஏற்கனவே அடையாளம் காணப்பட்டிருக்கும் 30 பேருக்கு எதிர்வரும் 4 வாரங்களுக்கிடையில் ஆஸியில் அரசியற் தஞ்சம் கிடைக்கும் என்றும் இவ்வதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply