Saturday November 25th 2017

Archives

பருப்பு, கருவாடு, பெரிய வெங்காயம் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்பு!

பருப்பு, கருவாடு, நெத்தலி, உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், தேங்காய் எண்ணெய் முதலான அத்தியாவசிய பொருட்களுக்கான இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், குறித்த பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது.

2018ஆம் ஆண்டுகான வரவு– செலவு திட்டத்திற்கு முன்னதாக இந்த அறிவிப்பினை அரசாங்கம் மேற்கொள்ள தீர்மானித்தாக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

இன்று வியாழக்கிழமை வரவு- செலவுத் திட்டம் முன்வைக்கப்படவுள்ள நிலையிலேயே, அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது.

சமகால அரசாங்கம் பதிவிக்கு வந்த பின்னர் 2015ஆம் ஆண்டு பல அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைத்தது. இந்த விலை குறைப்பு 2014ஆம் ஆண்டு இருந்த பொருட்களின் விலையிலும் பார்க்க மிக மிகக் குறைவாகும் என்று மங்கள சமரவீர கூறியுள்ளார்.

வாழ்க்கை செலவு சுமையிலிருந்து பொது மக்களை மீட்டெடுக்கும் பொருட்டு இந்த விலைக்குறைப்பை பெரும் சிரமத்திற்கு மத்தியில் அரசாங்கம் மேற்கொண்டது. சமீபத்தில் சமையல் எரிவாயுவின் விலை சிறிய தொகையில் குறைக்கப்பட்டுள்ளது. இது மக்களுக்கு பெரும் சுமையாக இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

1. விதை உருளைக்கிழங்கு – ரூபா 39 இனாலும்,
2. பெரிய வெங்காயம் – ரூபா 39 இனாலும்,
3. தேங்காய் எண்ணெய் – ரூபா 25 இனாலும்,
4. மரக்கறி – ரூபா 25 இனாலும்,
5. பருப்பு – ரூபா 12 இனாலும்,
6. கருவாடு – ரூபா 50 இனாலும் குறைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply