Saturday November 25th 2017

Archives

விமல் வீரவன்ச அச்சுறுத்தலானவர்; அவரை விசேட சோதனைக்கு உட்படுத்த வேண்டும்: துஷார இந்துநெல்

“தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்சவைக் கண்டால் பாரிய அச்சமாக உள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பினைக் கருத்தில் கொண்டு, அவரை விசேட சோதனைக்கு உட்படுத்த வேண்டும்.” என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துநெல் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “பாராளுமன்றத்திற்கு குண்டு வீசவேண்டுமென விமல் வீரவன்ச அண்மையில் கூறியிருந்தார். அவர், ஆரம்பத்தில் ஜே.வி.பியில் இருந்தபோது அக்கட்சிக்கு குண்டு வீசிவிட்டு சென்றார். பி.பீ.ஜெயசுந்தர போன்வர்களுடன் இணைந்து விமல் குண்டு வீசியதனாலேயே நாட்டின் பொருளாதாரம் நலிவடைந்தது. மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியும் இல்லாது போனது.

தற்போது பாராளுமன்றத்திற்கு குண்டு வீசப் போவதாக தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இது பாரிய அச்சுறுத்தலான விடயமாகும். விமல் வீரவன்ச பாராளுமன்றத்திற்கு வரும்போது பாராளுமன்றத்தின் முதலாவது வாசலில் இருந்தே விசேட பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்.

வாகனம் உட்பட அனைத்தும் சோதனைக்கு உட்படுத்தபட்டப் பின்னரே பாராளுமன்றின் உள்ளே பிரவேசிக்க அனுமதியளிக்க வேண்டும் என்பதுடன், பாராளுமன்றத்திலும் விசேட பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.” என்றுள்ளார்.

Leave a Reply