Tuesday July 16th 2019

இணைப்புக்கள்

Archives

நூறு படையினர், ஆறு வாகனங்கள், குண்டுதுளைக்காத வாகனம்: பாதுகாப்புக்கு கோருகிறார் சரத் பொன்சேகா

sfவிடுதலைப்புலிகளிடமிருந்து இன்னமும் உயிர் அச்சுறுத்தல் உள்ளதால் தனக்கு 100 பாதுகாப்பு படையினரும் 6 பாதுகாப்பு வாகனங்களும் குண்டு துளைக்காத வாகனம் ஒன்றும் தேவை என்று பதவி விலகிய முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவிடம் கோரிக்கை முன்வைத்துள்ளார்.

தனது இராஜினாமா கடிதத்தின் ஐந்தாவது விடயமாக இதனை குறிப்பிட்டுள்ள பொன்சேகா இது தொடர்பாக மேலும் தெரிவித்திருப்பதாவது:-

“விடுதலைப்புலிகளினால் இலக்கு வைக்கப்பட்டிருக்கும் முக்கியமானவர்களில் நானும் ஒருவனாக தொடர்ந்தும் இருந்துவருகிறேன். ஆகவே, நான் இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றாலும் எனக்கு தகுந்த பாதுகாப்பு வழங்குவதற்கு ஒழுங்குகளை அரசு மேற்கொள்ளவேண்டும்.

“ஓய்வு பெற்ற கடற்படைத்தளபதி அட்மிரல் கரனாகொடவுக்கு நூறு பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் ஆறு பாதுகாப்பு வாகனங்களும் குண்டு துளைக்காத வாகனம் ஒன்றும் அரசாங்கத்தால் வழங்கப்பட்டது. அவ்வாறான பாதுகாப்பு ஏற்பாடு எனக்கும் மேற்கொள்ளப்படுவதற்கு அரசாங்கம் உறுதிசெய்யவேண்டும்.

“எனக்கு உயிராபத்தை விளைவிக்கக்கூடிய ஆற்றல் விடுதலைப்புலிகளுக்கு இன்னமும் உண்டு என்பதை அரச தலைவராகிய நீங்கள் நன்கு அறிவீர்கள் என்று நம்புகிறேன்” – என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Leave a Reply