Saturday November 25th 2017

Archives

முதலீட்டுச் சபையின் தலைவர் பதவியிலிருந்து உபுல் ஜயசூரிய இராஜினாமா!

இலங்கை முதலீட்டுச் சபையின் தலைவர் பதவியிலிருந்து உபுல் ஜயசூரிய இராஜினாமா செய்துள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காகவே இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், தனது இராஜினாமாக் கடிதத்தை ஜனாதிபதி செயலாளரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனது கடமைக் காலத்தில் சில முடிவுகளை எடுக்கும் போது, பல்வேறு அழுத்தங்களுக்கு முகம் கொடுத்துள்ளதாக தெரிவித்த அவர், இவ்வாறு மன ஒத்துழைப்பு இன்றி செயற்படுவது சிரமமாக இருப்பதால் இந்த முடிவை எடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆயினும், தனது பதவிக் காலத்தில் தன்னால் பல்வேறு முடிவுகள் நிதானத்துடன் அலசி ஆராய்ந்து எடுக்க முடிந்ததாக சுட்டிக்காட்டியதோடு, ஜனாதிபதி, பிரதமர், மற்றும் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் ஆகியோர் வழங்கிய ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவிப்பதாக தெரிவித்தார்.

இதேவேளை, ஹொரணை டையர் நிறுவனத்திற்கு குத்தகைக்கு வழங்கப்பட்ட நிலம் தொடர்பில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து, இவர் மீது விமர்சனங்கள் எழுந்தமை குறிப்பிடத்தக்கது.

உபுல் ஜயசூரிய, 2014இல் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2015 (பெப்ரவரி 04) இல் இலங்கை முதலீட்டு சபையின் தலைவராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டார்.

Leave a Reply