Sunday February 25th 2018

Archives

பயங்கரவாதத்தைத் தடுக்க சார்க் நாடுகள் கூட்டாகச் செயற்பட வேண்டும்: ரணில்

பயங்கரவாதத்தையும், குற்றச்செயல்களையும் தடுக்க சார்க் நாடுகள் கூட்டு ஒத்துழைப்போடு செயற்பட வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

பயங்கரவாதத்திற்கான அடிப்படை காரணங்களுக்கு தீர்வு வழங்குவதில் யுத்தத்தின் பின்னராக காலப்பகுதியில் ஏற்பட்டுள்ள சவாலான பணி பற்றி கொழும்பில் நேற்று வியாழக்கிழமை ஆரம்பமான செயலமர்வில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

பிரதமர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “பாகிஸ்தான், இந்தியா உட்பட பிராந்தியத்தின் சில இடங்களில் ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகளின் செயற்பாடுகளினால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். பாரம்பரிய முறைகளில் இருந்து விலகி சைபர் தாக்குதல், இணையத்தாக்குதல் போன்றவற்றின் ஊடாகவும் பயங்கரவாத செயற்பாடுகள் இடம்பெறுகின்றன.

எமது நாட்டில் இராணுவத்தின் கட்டப்பாட்டில் இருந்த பொதுமக்களின் காணிகளை விடுவித்தல், காணாமற்போனவர்கள் தொடர்பான சட்டத்தின் மூலம் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தல் போன்ற நடவடிக்கைகளை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்காத வகையில் ஜனநாயகத்தையும், சமாதானத்தையும் ஸ்தாபிக்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது.” என்றுள்ளார்.

இந்தச் செயலமர்வில் சார்க் நாடுகளைச் சேர்ந்த 8 உள்துறை அமைச்சர்கள் கலந்து கொண்டுள்ளார்கள்.

Leave a Reply