Friday March 22nd 2019

இணைப்புக்கள்

Archives

ஜனாதிபதிக்கு உயிராபத்து; அவசரகால சட்டம் அவசியம்: பாதுகாப்பு அமைச்சு

ராஜபக்சஅரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் உயிருக்கு இன்னமும் அச்சறுத்தல் உள்ளது. நாட்டு நிலைமை அவ்வாறு இருக்கையில், அவசரகாலச்சட்டத்தை நீக்கமுடியாது என்று சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

அவசரகால சட்டத்தை நீ்க்காமல் நாட்டில் போர் முடிந்துவிட்டது என்று கூறுவதில் அர்த்தம் இல்லை என்று பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் அண்மையில் தெரிவித்தமை தொடர்பாக கருத்து கூறியுள்ள சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் – விடுதலைப்புலிகள் முற்றாக அழிக்கப்பட்டாலும் அவர்களது புலனாய்வுப்பிரிவில் எஞ்சியுள்ளவர்களால் ஆபத்துக்கள் ஏற்பட வாய்ப்புண்டு. விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்ட கடந்த மே மாதத்துக்கு பின்னர் அரச தலைவர் மகிந்தவை கொலை செய்வதற்கு இரண்டு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. அரச புலனாய்வு பிரிவினரின் சாதுரியத்தால் அது தடுக்கப்பட்டுவிட்டது.

கைத செய்யப்பட்டுள்ள மிக முக்கியமாக புலி உறுப்பினர்கள் மற்றம் புலனாய்வு உறுப்பினர்களை தொடர்ந்தும் விசாரணை செய்து பல தகவல்களை பெறவேண்டியுள்ளது.

ஆகவே, மேற்குலகமும் ஐரோப்பிய ஒன்றியமும் கோரிக்கை விடுவதுபோல குருட்டுத்தனமாக நாட்டில் சட்டஒழுங்குகளை பேணமுடியாது. உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் விடுதலைப்புலி உறுப்பினர்களை முற்றாக அழித்து ஒழிக்கும் வரையில் சிறிலங்காவின் நடவடிக்கைகள் தொடரும். – என்று கூறியுள்ளார்.

Reader Feedback

One Response to “ஜனாதிபதிக்கு உயிராபத்து; அவசரகால சட்டம் அவசியம்: பாதுகாப்பு அமைச்சு”

  1. csjeeva says:

    அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் உயிருக்கு இன்னமும் அச்சறுத்தல் உள்ளது.

    குருட்டுத்தனமாக நாட்டில் “சட்டஒழுங்குகளை பேணமுடியாது” 25,000 Tamils civilians were killed by GoSL. But stil சிறிலங்காவில் நடவடிக்கைகள் தொடரும்????

Leave a Reply