Tuesday May 21st 2019

இணைப்புக்கள்

Archives

இந்தோனேஷியாவில் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் உண்மையான அகதிகள் அல்லர்

பாலித கோகன்னசிறிலங்காவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக சென்றவர்கள் அனைவரும் தமது வாழ்வை மேம்படுத்துவதற்கான பொருளாதார காரணிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதற்காக அங்கு சென்றவர்களே தவிர, உயிராபத்தை எதிர்நோக்கும் உண்மையான அகதிகள் அல்லர் என்று ஐக்கிய நாடுகள் சபைக்கான சிறிலங்கா தூதுவர் பாலித கோகன்ன தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய ஊடகமான ‘த ஒஸ்ரேலியன்’ பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் –

ஆஸ்திரேலியாவுக்கு செல்லும் வழியில் இந்தோனேஷிய கடற்படையினரால் கைத செய்யப்பட்ட 78 அகதிகளும் சிறிலங்காவிலிருந்து புறப்பட்டிருப்பதற்கு வாய்ப்பே இல்லை. அவர்கள் உண்மையாகவே தமது உயிருக்கு ஆபத்து என்று கருதியிருந்தால் சிறிலங்காவுக்கு அருகில் – 35 கிலோ மீற்றர் தொலைவில் – உள்ள இந்தியாவுக்கு சென்றிருக்கலாம். ஏன் ஆஸ்திரேலியா செல்லவேண்டும்?

ஆஸ்திரேலியா என்ற நாடு சட்டவிரோத குடியேற்றவாசிகளை பெருந்தன்மையுடன் ஏற்று அகதிகள் அந்தஸ்து வழங்குகின்றது என்ற பொதுவான தகவலினால் ஈர்க்கப்பட்டவர்களே இவர்கள் ஆவர்.

இவர்கள் அனைவரும் சிறிலங்காவுக்கு திருப்பி அனுப்பப்படவேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்து. அவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டால்தான், ஆஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக செல்வதற்கு தற்போதும் திட்டமிட்டுக்கொண்டிருப்பவர்களுக்கு ஒரு பாடமாக அமையும்.

இந்த அகதிகளுக்கு சார்பாக ஐக்கிய நாடுகள் அமைப்புகள் விடும் அறிக்கைகளை விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் தமது பிரசார நடவடிக்கைக்கு ஆயுதமாக பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்பதை குறிப்பிட்ட அமைப்புகள் விளங்கிக்கொள்ளவேண்டு்ம்.

Reader Feedback

One Response to “இந்தோனேஷியாவில் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் உண்மையான அகதிகள் அல்லர்”

  1. csjeeva says:

    ஆஸ்திரேலியாவுக்கு செல்லும் வழியில் இந்தோனேஷிய கடற்படையினரால் கைத செய்யப்பட்ட 78 அகதிகளும் சிறிலங்காவிலிருந்து புறப்பட்டிருப்பதற்கு வாய்ப்பே இல்லை. அவர்கள் உண்மையாகவே தமது உயிருக்கு ஆபத்து என்று கருதியிருந்தால் சிறிலங்காவுக்கு அருகில் – 35 கிலோ மீற்றர் தொலைவில் – உள்ள இந்தியாவுக்கு சென்றிருக்கலாம். ஏன் ஆஸ்திரேலியா செல்லவேண்டும்?

    சிறிலங்காவுக்கு அருகில் – 35 கிலோ மீற்றர் தொலைவில் – உள்ள இந்தியாவுக்கு சென்றிருக்கலாம் It is your reality but Genocide against Tamils “SRILANKA AND INDIA”.Who is telling the truth. UNO is also failed to protect and save the Civilians.Who killed more than 30,000 just before End of the war in May. NOW “உயிராபத்தை எதிர்நோக்கும் உண்மையான அகதிகள் அல்லர்” என்று ஐக்கிய நாடுகள் சபைக்கான சிறிலங்கா தூதுவர் பாலித கோகன்ன தெரிவித்துள்ளார்.

Leave a Reply