Friday March 22nd 2019

இணைப்புக்கள்

Archives

ஸ்ரீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச முட்டாள் தனமான நடவடிக்கையில் ஈடுபடுகிறார்

மியன்மார் பௌத்த துறவிகள்ஸ்ரீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச முட்டாள் தனமான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக இலங்கையில் உள்ள மியன்மாரைச் சேர்ந்த பௌத்த துறவிகள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

சர்வதேச அரசாங்கில் மோசமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வரும் ஒருவராக விமர்சிக்கப்பட்டு வரும் மியன்மாரின் இராணுவ ஆட்சியாளர் தான் சுவே என்பவரை அரசு முறைப்பயணம் மேற்கொண்டு இலங்கைக்கு விஜயம் செய்ய மகிந்த ராஜபக்ச தொடர்பில் அவர்கள் இந்த விமர்சனத்தை முன்வைத்துள்ளனர்.

இலங்கையில் இடம்பெற்று வரும் மோசமான மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச நாடுகள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள தான் சுவே இலங்கைக்கு விஜயம் செய்வது மேலும் சர்வதேச நெருக்கடிகளை ஏற்படுத்தும் என்று பௌத்த துறவிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இலங்கைக்கு நாளைய தினம் விஜயம் செய்யவுள்ள மியன்மாரின் இராணுவ ஆட்சியாளர் தான் சுவே கண்டிக்கு சென்று தலதா மாளிகையில் வழிபாடு செய்யவுள்ளதாகவும் மகிந்த ராஜபகச்சவை சந்தித்து பேசவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Reader Feedback

One Response to “ஸ்ரீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச முட்டாள் தனமான நடவடிக்கையில் ஈடுபடுகிறார்”

  1. csjeeva says:

    RELIGIOUS LEADER’S SHOULD AVOID FROM POLITICAL.
    MUST EMBRACE THE UNITY.

Leave a Reply