Friday March 22nd 2019

இணைப்புக்கள்

Archives

ஈழத்தமிழ் மக்களுக்கு எதிரான போருக்கு உதவியாக வழங்கிய கடற்படை கப்பல்களை மீளப்பெற்றுக்கொள்ள இந்தியா திட்டம்

sayuraஈழத்தமிழ் மக்களுக்கு எதிராக சிறீலங்கா அரசு மேற்கொண்ட போருக்கு உதவியாக இந்தியா வழங்கிய ஆழ்கடல் ரோந்து கப்பல்கள் இரண்டையும் மீளப்பெற்றுக்கொள்ள இந்தியா திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிறீலங்கா அரசானது ஈழத்தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொண்ட போருக்கு ஆதரவாக இந்தியா வாரகா மற்றும் விக்ரகா ஆகிய ஆழ்கடல் சுற்றுக்காவல் கப்பல்களை சிறீலங்கா கடற்படைக்கு அன்பளிப்பாக வழங்கியிருந்தது.

தற்போது சிறீலங்கா அரசு இந்த பீரங்கி கப்பல்களை பயன்படுத்தி மிகப்பெரும் மனித அழிவுகளுடன் போரை நிறைவு செய்துள்ள நிலையில் அதனை மீளப்பெற்றுக்கொள்ள இந்திய திட்டமிட்டுள்ளது.

எனினும் சிறீலங்கா கடற்படையினர் அதனை மீண்டும் ஒப்படைப்பதற்கு தயக்கம் காட்டி வருகின்றனர்.

தாம் சீனா மற்றும் பாகிஸ்தானிடம் ஆயுதங்களை பெற்றுக்கொள்வோம் என்ற மிரட்டல்களின் அடிப்படையில் இரண்டு கப்பல்களையும் நிரந்தரமாக வைத்துக்கொள்ள சிறீலங்கா திட்டமிட்டுள்ளது.

பீரங்கிகள் பொருத்தப்பட்ட இந்த கப்பல்களில் உலங்குவானூர்தி தரித்து செல்லும் வசதிகளும் உண்டு.

Leave a Reply