Friday March 22nd 2019

இணைப்புக்கள்

Archives

பொன்சேகாவால் ஓரங்கட்டப்பட்ட இராணுவ தளபதிக்கு மகிந்த உயர்பதவி!

மேஜர் ஜெனரல் பராக்கிரம பண்ணிப்பிட்டிசரத் பொன்சேகாவால் ஓரங்கட்டப்பட்ட முத்த தளபதியும் தொப்பிகல காட்டுப்பிரதேசத்தை விடுதலைப்புலிகளிடமிருந்து கைப்பற்றிய அணியின் தளபதியுமான மேஜர் ஜெனரல் பராக்கிரம பண்ணிப்பிட்டியவுக்கு படைகளின் பிரதானி என்ற முக்கிய பதவியை வழங்க அரச தலைவர் மகிந்த முடிவெடுத்திருப்பதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை, சரத் பொன்சேகாவின் தீவிர விசுவாசியான மேஜர் ஜெனரல் மென்டக சமரசிங்கவுக்கு அரச தரப்பிலிருந்து மறைமுகமாக விடுக்கப்பட்ட பல்வேறு அழுத்தங்களை அடுத்து, அவர் ஓய்வுபெற்று வெளிநாடு ஒன்றுக்கு இராஜதந்திரியாக செல்லவுள்ளார் என்றும் தெரியவருகிறது.

Leave a Reply