Tuesday May 21st 2019

இணைப்புக்கள்

Archives

உலக நாட்டின் ஒத்துழைப்புடனே புலிகளை அழித்தோம்

மகிந்த ராஜபக்சதமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தத்தை வெற்றி கொள்ளவதற்கு பல்வேறு உலக நாடுகள் தமக்கு ஒத்துழைப்பு வழங்கியதாக ஸ்ரீலங்கா ஜனாதிபதி ஒப்புக் கொண்டுள்ளார்.

இந்தியா.பாகிஸ்தான்,சீனா,அமெரிக்கா ஆகிய நாடுகளின் படைத்துறை ஒத்துழைப்புகள் மூலமே விடுதலைப்புலிகளை இராணுவ ரீதியில் தோற்கடிக்க முடிந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பி;ன் போதே ஜனாதிபதி இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

குறிப்பாக தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆயுதக் கப்பல்கள் குறித்து அமெரிக்கா வழங்கிய தகவல்களின் அடிப்படையில் மிதக்கும் ஆயுதக் களஞ்சியங்கள் நான்கினை ஸ்ரீலங்கா கடற்படையினர் அழித்ததாகவும் இதன் காரணமாகவே விடுதலைப் புலிகளின் போராட்ட வலு இல்லாதொழிக்கப்பட்டது என்றும் மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.

தமது வெளிவிவாகர கொள்கைகள் தவறானவை என்று விமர்சனம் செய்பவர்கள் இதனை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் என்றும் சரியான வெளியுறவுக் கொள்கைகள் மூலமே வெளிநாடுகளின் உதவிகளை விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் தம்மால் பெற்றுக் கொள்ள முடிந்ததது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Reader Feedback

2 Responses to “உலக நாட்டின் ஒத்துழைப்புடனே புலிகளை அழித்தோம்”

  1. senthil says:

    America also helped? It was Bush’s America then

  2. csjeeva says:

    Meanwhile, there are official reports that several “welfare villages” have been established to house displaced Tamils in Vavuniya and Mannar districts. According to a report in the Daily Telegraph, these villages “will be compulsory holding centres for all civilians fleeing the fighting”. Is this a euphemism for concentration camps? Mangala Samaraveera, the former foreign minister, told the Telegraph: “A few months ago the government started registering all Tamils in Colombo on the grounds that they could be a security threat, but this could be exploited for other purposes, like the Nazis in the 1930s. They’re basically going to label the whole civilian Tamil population as potential terrorists.”

Leave a Reply