Friday March 22nd 2019

இணைப்புக்கள்

Archives

எந்த இடத்தில் பொன்சேகாவின் படம் இருந்தாலும் உடன் நீக்குமாறு அரசு உத்தரவு

சரத் பொன்சேகாகூட்டுப்படைத் தலைமையதிகாரியான முன்னாள் ராணுவத்தளபதி ஜெனெரல் சரத் பொன்சேகாவின் படங்களைக் கொண்டுள்ள சாலையோர கட் அவுட்கள், பனர்கள் அனைத்தையும் உடனும் நீக்குமாறு அரசாங்கம் மேல்மாகாண மாநகர அபிவிருத்திச் சபைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவானது மாநகர அபிவிருத்திச் சபைக்கு இன்று மாலையில் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தமக்கு மிக நம்பிக்கையான வட்டாரங்களிலிருந்து தகவல் கிடைத்துள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி நா.உ ஜோன் அமரதுங்க கூறியுள்ளார்.

அரசாங்கத்தின் இந்த உத்தரவுக்கு தமது கண்டனத்தைத் தெரிவித்துள்ள அமரதுங்க, சரத் பொன்சேகாவின் ராணுவ வெற்றிக்காக அமைக்கப்பட்ட இந்த கட் அவுட்கள் நீக்கியவுடன் அவரின் சாகசங்கள் இல்லாமல் போய்விடாது என்று கூறியுள்ளார். ஆனால் இவ்விடயம் குறித்து மேல் மாகாண மாநகர அபிவிருத்திச் சபையின் இயக்குநரைத் தொடர்பு கொண்டபோது இவ்வாறான உத்தரவு தமக்குக் கிடைக்கவில்லை எனக் கூறியுள்ளார்.

ராஜினாமாவை ஏற்க தயார்: எதிர்வரும் தேர்தலில் போட்டியிடும் எண்ணத்தில் சரத் பொன்சேகா தமது பதவியிலிருந்து ராஜினாமா செய்ய விரும்பினால் அந்த ராஜினாமாவைத் தாம் உடனும் ஏற்றுக்கொள்ளுவேன் என சில சிரேஷ்ட அமைச்சர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுடன் சாதாரணமாகப் பேசிக் கொண்டிருந்த போது மஹிந்த தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply