Saturday July 31st 2010

மகிந்த சமரசிங்க தலைமையிலான குழுவினர் ஜெனீவாவில் ஐக்கிய நாடுகளின் பிரதிநிதிகளை சந்தித்து பேச்சுவார்தை

ஸ்ரீலங்காவின் மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க தலைமையிலான குழுவினர் இன்று ஜெனீவாவில் ஐக்கிய நாடுகளின் பிரதிநிதிகளை சந்தித்து பேச்சுவார்தை நடத்தவுள்ளனர்.

இலங்கை அரசாங்கம் மீது சுமத்தப்பட்டுள்ள யுத்தக் குற்றங்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளைக்கு விளக்கமளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா வெள்ளைக் கொடிகளுடன் சரணடைந்த விடுதலைப் புலிகளின் அரசியல் போராளிகளை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டபாய ராஜபக்சவின் உத்தரவிற்கு அமைவய இராணுவத்தினர் சுட்டுக் கொன்றதாக தெரிவித்த கருத்து தொடர்பிலும் இன்றைய தினம் விளக்கமளிக்கப்டவுள்ளதாக தெரியவந்துள்ளது.

மகிந்த சமரசிங்க தலைமையிலான குழு ஜெனீவாவிற்கு விஜயம் செய்துள்ளமை அரசியல் நோக்கம் கருதிய நகர்வு என்றும் சரத் பொன்சேகாவை கைது செய்வதற்காக அரசாங்கம் மேற்கொண்டுள்ள நாடகமே இந்த விஜயம் என்றும் எதிர் கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன.

சரத் பொன்சேகா வெளியிட்டுள்ள கருத்துகளால் இலங்கைக்கு நெருக்கடி ஏற்பட்டுளதாகவம் அதனை தீர்ப்பதற்கு தாங்கள் கடும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகவும் மக்களை நம்ப வைப்பதற்காகவும் சரத் பொன்சேகாவின் கைதினை நியாயப்படுத்தி மக்களின் உணர்ச்சி போராட்டங்களை தடுப்பதற்கும் அரசாங்கம் முயற்ச்சிப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Reader Feedback

2 Responses to “மகிந்த சமரசிங்க தலைமையிலான குழுவினர் ஜெனீவாவில் ஐக்கிய நாடுகளின் பிரதிநிதிகளை சந்தித்து பேச்சுவார்தை”

  1. csj says:

    Where is our brothers and sister killed by” இலங்கை அரசாங்கம் “see no evil, hear no evil, speak no evil” by UN and IC failed to save the humanity. இலங்கை அரசாங்கம்”War Crime” மீது சுமத்தப்பட்டுள்ள யுத்தக் குற்றங்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளை will save, punished or wipe out the Tamils by World Nation?

  2. csj says:

    UN is failed to save the Humanity in Srilanka.” இலங்கை அரசாங்கம் மீது சுமத்தப்பட்டுள்ள யுத்தக் குற்றங்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளை”.

    முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா வெள்ளைக் கொடிகளுடன் சரணடைந்த விடுதலைப் புலிகளின் அரசியல் போராளிகளை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டபாய ராஜபக்சவின் உத்தரவிற்கு அமைவய இராணுவத்தினர் சுட்டுக் கொன்றதாக தெரிவித்த கருத்து தொடர்பிலும் “See no evil, Hear no evil, Speak no evil”

Leave a Reply