Sunday September 5th 2010

பொன்சேகாவிற்கு மருந்துகளை வழங்கும்படி மனைவி அனோமா விடுத்த கோரிக்கைக்கு பதிலில்லை

இராணுவக் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ள ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு ஆறு மணித்தியாலத்திற்கு ஒருமுறை உட்கொள்ள வேண்டிய மருந்துகளை வழங்குமாறு அவரது மனைவி அனோமா பொன்சேகா, அனுமதி கோரியுள்ள போதிலும் அந்தக் கோரிக்கைக்கு பாதுகாப்பு அமைச்சு இதுவரை பதிலளிக்கவில்லை.

கொழும்பில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் படுகாயமடைந்த ஜெனரல் சரத் பொன்சேகாவின் உடம்பில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் காரணமாக வாழ்நாள் முழுவதும் இந்த மருந்தகளை உட்கொள்ள வேண்டும் என வைத்தியர்கள் பரிந்துரைத்திருந்தனர் என்றும் -

18 மணித்தியாலங்களுக்கு மேலாக மருந்து உட்கொள்ளாமல் போனால், அவருக்கு பாரிய பின்விளைவுகள் ஏற்படும் என வைத்தியர்கள் எச்சரித்திருந்ததாகவும் அனோமா பொன்சேக்கா தெரிவித்துள்ளார். ஆனாலும், பாதுகாப்பு அமைச்சு பொன்சேகாவிற்கான வைத்திய வசதிகள் குறித்து எதுவும் பதிலளிக்கவில்லை என்று எதிர்க்கட்சி வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது.

Related posts

Reader Feedback

One Response to “பொன்சேகாவிற்கு மருந்துகளை வழங்கும்படி மனைவி அனோமா விடுத்த கோரிக்கைக்கு பதிலில்லை”

  1. yoga says:

    எத்தனை ஆயிரம் ஆயிரம் பெண்களை இந்த ஆள் அழ வைச்சிருப்பான். செய்த பாவம் தீர வேண்டாமோ . இவனுக்காக யாரும் கவலைப்படப் போவதில்லை.
    இது ஆரம்பம் மட்டுந்தான்.

Leave a Reply