Wednesday September 2nd 2015

இணைப்புக்கள்

Archives

சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதகரத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்! பாதுகாப்பு அதிகரிப்பு

chennai_embassyசென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதகரத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் இலங்கை துணைத் தூதரகம் அமைந்துள்ளது. இதற்கு எப்போதும் பொலிஸார் பாதுகாப்புபோடப்பட்டிருக்கும்.

இந்த நிலையில் இலங்கைத் துணை தூதரகத்துக்கு வெள்ளிக்கிழமை வந்த ஒரு தபால் அட்டையில், பீகார் மாநில புத்த காயாவில் நடந்தது போல இலங்கை துணைத் தூதரகத்திலும் வெடி குண்டு தாக்குதல் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து, இலங்கை தூதரகத்துக்கு கூடுதல் பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஏற்கனவே இன்ஸ்பெக்டர் ஒருவர் தலைமையில் சுமார் 20 பொலிஸார் தினமும் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தற்போது தூதரகம் முன்பு கூடுதலாக பொலிஸார் நிறுத்தப்பட்டுள்ளனர். சந்தேகத்துக்கிடமாக யாரும் நடமாடுகிறார்களா? என்பது குறித்து மாறு வேடத்திலும் பொலிஸார் கண்காணிக்கிறார்கள்.

இந்த மிரட்டல் கடிதம் குறித்து நுங்கம்பாக்கம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

முகமது இஸ்மாயில் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

எந்த பகுதியில் இருந்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என்பது பற்றியும் பொலிஸார் துப்புத் துலக்கி வருகிறார்கள்.

Leave a Reply