Thursday August 22nd 2019

இணைப்புக்கள்

Archives

போர் முடிவடைந்துவிட்டதால் கனரக ஆயுதங்களை விற்க அரசை கோருகிறது ஐ.தே.க

slபோர் முடிவடைந்த காரணத்தினால் தேவையில்லாத கனரக ஆயுதங்களை வைத்திருந்து இனிமேல் பயனில்லை. அவற்றை விற்று அரசு பணம் சம்பாதிக்கும் வழியை பார்க்கவேண்டும் என்று அரசிடம் ஐக்கிய தேசிய கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

நாடாளமன்றத்தில் பேசிய அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இது தொடர்பாக பேசுகையில் –

ஆட்லறிகள், பல்குழுல் பீரங்கிகள், மிக் தாக்குதல் விமானங்கள் ஆகியவற்றை பயன்படுத்தி போரில் அரசு பாரிய வெற்றியை ஈட்டியது. ஆனால், தற்போது போர் முடிவடைந்துவிட்டது. இனிமேல் அந்த கனரக ஆயுதங்களையும் விமானங்களையும் அரசு வைத்திருப்பதில் எந்த பயனும் இல்லை.

அவற்றை கழிவு விலையில் விற்றாவது அரசுக்கு நிதியை பெற்றுக்கொள்ளலாம் – என்று கூறினார்.

Leave a Reply