Thursday August 22nd 2019

இணைப்புக்கள்

Archives

இராணுவத்தின் தலைமை அதிகாரி பதவியில் இருந்து விலகுவதற்கு பொன்சேகா திட்டம்

sarathசிறீலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சாவுக்கும் முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேக்காவுக்கும் இடையிலான மோதல்கள் வலுவடைந்து வருகின்றன. இதனை தொடர்ந்து தனது பதவியை துறப்பதற்கு பொன்சேக்கா திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

எதிர்வரும் அரச தலைவருக்கான தேர்தலில் முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் பென்சேக்கா போட்டியிடுவார் என்ற கருத்துக்கள் வெளியாகியதை தொடர்ந்து சிறீலங்காவின் அரச தலைவருக்கும் பொன்சேக்காவுக்கும் இடையிலான மோதல்கள் வலுவடைந்து வருகின்றன.

இதனை தொடர்ந்து பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரி பொறுப்பில் இருந்து பதவி விலகுதற்கு பொன்சேக்கா திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொன்சேக்கா இராணுவ தளபதியாக இருந்த போது அவரின் பதவிக்காலம் எதிர்வரும் டிசம்பர் 18 ஆம் நாளுடனே நிறைவுக்கு வருவதாக இருந்தது. எனினும் அதனை இடைநடுவில் விலக்கி கொண்ட அரசு கடந்த ஜுலை மாதம் பொன்சேக்காவுக்கு பாதுகாப்பு துறை தலைமை அதிகாரி என்ற பதவியை வழங்கியிருந்தது.

இரண்டு ஆண்டுகள் அதிகாரமுடைய இந்த பதவியின் முடிவுக்காலம் எதிர்வரும் 2011 ஆம் ஆண்டு நிறைவுக்கு வருகின்றது.

ஆனால் தனது இராணுவத்தளபதி பதவியின் முடிவுக்காலமான எதிர்வரும் டிசம்பர் 18 ஆம் நாளுடன் ஒய்வு பெறுவதற்கு பொன்சேக்கா திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply