Tuesday November 20th 2018

Archives

ஐக்கிய தேசிய முன்னணி எனும் 20 கட்சிகள் அமைப்புகள் உள்ளடக்கிய கூட்டமைப்பு உருவாக்கம்

ranilஎதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் 20 கட்சிகள் மற்றும் அமைப்புகள் இணைந்த ஐக்கிய தேசிய முன்னணி எனும் பொதுக் கூட்டமைப்பை உருவாக்கப்பட்டுள்ளது.

இன்று செவ்வாய்க்கிழமை சிறீலங்கா நாடானுமன்றக் கட்டிடத்தொகுதியில் இதற்கான பொது ஒப்பந்தம் முற்பகல் 11:30 மணிக்கு கைச்சாத்திடப்பட்டுள்ளது.

ஒப்பந்தத்தில் ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஜனநாயக மக்கள் முன்னணி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவு, புதிய சிஹல உறுமய உள்ளிட்ட 20 கட்சிகளும், அமைப்புக்களும் கைச்சாத்திட்டுள்ளன.

சிறீலங்காவில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பது உட்பட 10 அம்ச இணக்கப்பாடுகளை கருத்தில் கொண்டே எதிர்க்கட்சிகளின் பொதுக் கூட்டமைப்பான ஐக்கிய தேசிய முன்னணி உருவாக்கப்படுள்ளது.

Leave a Reply