Thursday August 22nd 2019

இணைப்புக்கள்

Archives

மேற்குலகத்துடனான மோதல்களில் சிறீலங்கா வெற்றிபெற்று வருகின்றது ஆனால் மேலும் பல பிரச்சனைகள் சிறீலங்காவை சூழ்ந்து வருகின்றன:ஐபிஎஸ் செய்தி நிறுவனம்

USObverse_1கடந்த சில வாரங்களாக மேற்குலகத்திற்கும் சிறீலங்காவுக்கும் இடையிலான மோதல்கள் உக்கிரம் பெற்றுள்ளன எனினும் இந்த வாரத்தின் இறுதியில் சிறீலங்கா அரசிற்கு ஒரளவு நிம்மதி கிடைத்துள்ளது. ஆனால் மேலும் பல பிரச்சனைகள் சிறீலங்காவை சூழ்ந்து வருகின்றன என ஐபிஎஸ் செய்தி நிறுவனம் தனது ஆய்வில் தெரிவித்துள்ளது.

அதன் முக்கிய பகுதிகள் வருமாறு:

சிறீலங்காவுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான மோதல்கள் நிறைவு பெற்ற போதும் மேற்குலகத்திற்கும் சிறீலங்காவுக்கும் இடையிலான மோதல்கள் தொடர்கின்றன.

அரசு போரை நிறைவுசெய்த முறை குறித்து மேற்குலகம் கடும் விசனம் அடைந்துள்ளது. எனினும் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபை மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழுக்களில் சிறீலங்காவுக்கு எதிராக கொண்டுவரப்பட்டிருந்த விவாதங்களை சிறீலங்கா அரசு பிராந்திய வல்லரசுகளான சீனா மற்றும் இந்தியாவின் துணையுடன் முறியடித்துள்ளது.

ஆனால் தற்போது மீண்டும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இரஜதந்திர மோதல்கள் ஏற்பட்டுள்ளன. சிறீலங்காவின் முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் சரத்பொன்சேக்காவை அமெரிக்கா விசாரணை செய்ய முற்பட்டதுடன், ஐரோப்பிய ஒன்றியமும் ஜிஎஸ்பி பிளஸ் வர்த்தக வரிச்சலுகை தொடர்பான எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.

இந்த வரிச்சலுகை மூலம் சிறீலங்கா 2008 ஆம் ஆண்டு 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை சம்பாதித்திருந்தது. ஐரோப்பிய ஒன்றியம் கடந்த மாதம் வெளியிட்ட அறிக்கையில் சிறீலங்கா அரசு அனைத்துலக விதிகளை மீறியுள்ளதாக குற்றம்சாட்டியிருந்தது.

இதற்கான பதிலை சிறீலங்கா அரசு நேற்று (6) சமர்ப்பித்திருந்தது. 48 பக்கங்களை கொண்ட இந்த அறிக்கையானது ஐரோப்பிய ஒன்றியத்தின் குற்றச்சாட்டுக்களுக்கான மறுப்பு அறிக்கையாக அமைந்துள்ளது.

rohitaதமக்கு சாதகமான முடிவுகள் வரும் என சிறீலங்காவின் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். சிறீலங்கா தனது பதிலை சமர்ப்பிக்க முன்னர் சிறீலங்காவின் அதிகாரிகள் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமையகத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர்.

ஐரோப்பிய ஒன்யத்தை சேர்ந்த சில நாடுகள் சிறீலங்காவின் போர் நடவடிக்கை தொடர்பாக விசனமடைந்துள்ளன. ஆனால் ஐ.நா ஊடாக ஒரு தீர்மானத்தை கொண்டுவருவதில் அவர்களின் பங்கு மட்டுப்படுத்தப்பட்டதாகவே இருக்கின்றது.

அமெரிக்காவின் வெளிவிவகார திணைக்களம் அதன் காங்கிரஸ் சபையில் கடந்த மாதம் சமர்ப்பித்திருந்த அறிக்கையும் சிறீலங்காவில் மேற்கொள்ளப்பட்ட போரியல் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக கடும் விமர்சனங்களை கொண்டிருந்தது.

சிறீலங்காவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான இரஜதந்திர மோதல்கள் கடந்த மாதம் 28 ஆம் நாள் உச்சம் பெற்றிருந்தது. அதாவது அமெரிக்கா பொன்சேக்காவை விசாரிக்க முற்பட்ட போது அது உக்கிரம் பெற்றிருந்தது.

அமெரிக்காவில் வசிப்பதற்கான கிறீன் கார்ட் விசாவை கொண்டுள்ள பொன்சேக்கா அமெரிக்காவில் உள்ள தனது மகளை பார்ப்பதற்காக அமெரிக்கா சென்றிருந்தார். சிறீலங்காவின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாயா ராஜபக்சா மற்றும் சிறீலங்காவில் மேற்கொள்ளப்பட்ட போரியல் குற்றங்கள் தொடர்பாகவே பொன்சேகாவை விசாரணை செய்ய அமெரிக்கா திட்டமிட்டதாக போகோலகம தெரிவித்திருந்தார்.

உடனடியாகவே சிறீலங்கா பதில் நடவடிக்கையில் இறங்கியது. சிறீலங்காவிற்கான அமெரிக்க தூதுவருடன் சிறீலங்காவின் வெளிவிவகார அமைச்சர் தொடர்ச்சியான சந்திப்புக்களை மேற்கொண்டார். நவம்பர் 2 மற்றும் 3 ஆம் நாட்களில் மேற்கொள்ளப்பட்ட இந்த கலந்துரையாடல்களை தொடர்ந்து சிறீலங்காவின் நிலைப்பாட்டை வொசிங்டனிடம் தெரிவிப்பதாக அமெரிக்க தூதுவர் தெரிவித்திருந்தார்.

ஆனால் சிறீலங்காவிற்கான அமெரிக்க தூதரகமோ அல்லது அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்பு திணைக்களமோ இது தொடர்பில் வாய்திறக்கவில்லை. நவம்பர் 4 ஆம் நாள் அமெரிக்கா நேரம் பிற்பகல் 3.00 மணிக்கு விசாரணைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆனால் விசாரணைக்கு 18 மணிநேரங்களுக்கு முன்னதாகவே பொன்சேக்கா அமெரிக்காவை விட்டு வெளியேறிவிட்டதாக சிறீலங்கா நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த நடவடிக்கையை சிறீலங்கா தனது வெற்றியாக கருதுகின்றது.

fonsekaபொன்சேக்கா முதலில் இந்த விசாரணைகளுக்கு உடன்பட்டதாகவும் ஆனால் பின்னர் அவர் தனது மனதை மாற்றிக்கொண்டு விட்டதாகவும் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஒக்டோபர் மாதம் கோத்தபாயா ராஜபக்சாவும் அமெரிக்க அதிகாரிகளினால் விசாரணை செய்யப்பட்டிருந்தார்.

இந்த வாரத்தின் இறுதியில் சிறீலங்கா அரசிற்கு ஒரளவு நிம்மதி கிடைத்துள்ளது. ஆனால் மேலும் பல பிரச்சனைகள் சிறீலங்காவை சூழ்ந்து வருகின்றன என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply