Wednesday June 19th 2013

Archives

தமிழீழ அரசாங்கம் மீளமைத்துள்ள அமைச்சரவையின் விபரங்கள்!

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது மேற்சபைக்கான நியமனங்களை அறிவித்திருந்த நிலையில் தற்போது மீளமைக்கப்பட்டுள்ள தனது அமைச்சரவை பற்றிய விபரங்களை இன்று வெளியிட்டுள்ளது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் வளர்ச்சி மற்றும் அமைச்சரவையின் செயற்திறன் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட உள்ளார்ந்த மதிப்பீட்டின் அடிப்படையில் தனது அமைச்சரவை மீளமைத்துள்ளதாக பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் இவ்விடயம் குறித்து தெரிவித்துள்ளார்.

15 அமைச்சர்களை கொண்டதாக விரிவாக்கம் பெற்றுள்ள அமைச்சரவை மீளமைப்பு குறித்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் பணிமனையினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக செய்தியில்,

பொதுவாக உலகில் உள்ள அரசாங்கங்கள் காலத்தின் தேவைகளுக்கு ஏற்ப தமது அமைச்சரவையினை புதுப்பித்துக் கொள்வதென்பது வழமையில் காணப்படும் ஒரு நடைமுறையாகவுள்ளது. இந்நடைமுறைக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் விதிவிலக்கானதல்ல.

அந்தவகையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்திறனை மேலும் செழிப்படைய வைக்கும் நோக்கில் அமைச்சரவை மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இம்மாற்றங்கள் அமைச்சரவையின் தொடர்ச்சியை உறுதிபடுத்தவும் அதே வேளையில் பல புதிய உறுப்பினர்களை அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ளவும் வாய்ப்பளித்தமை மகிழ்ச்சிக்குரியதே.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினது இலக்கினை அடைவதற்கு மீளக் கட்டமைக்கப்பட்டுள்ள அமைச்சரவை அர்ப்பணிப்புடன் செயற்படும் என்பதை உறுதியாகத் தெரிவிக்க விரும்புகிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவையின் விபரங்கள்:

துணைப் பிரதமர்கள்:

திரு உருத்திராபதி சேகர் – மாவீரர்கள், போராளிகள் குடும்ப நலன் பேணல்

பேராசிரியர் செல்வா செல்வநாதன் – நிதித்துறை

திருமதி சுபா சுந்தரலிங்கம் – துறைசாரா அமைச்சர் – பிரதமர் பணியகத் தலைவி

அமைச்சுக்களின் விபரங்கள் :

திரு டிலக்சன் மொறிஸ் – இனஒழிப்பு, போர்க்குற்றங்கள் மானிடத்துக்கெதிரான குற்றவிசாரணை-தடுப்பு

திருமதி பாலாம்பிகை முருகதாஸ் – பெண்கள், சிறுவர், மூத்தோர் நலன் பேணல்

கலாநிதி தவேந்திர ராஜா – கல்வி, உடல்நலத்துறை

திரு முத்துக்குமாரசுவாமி இரத்னா – ஏதிலிகள் விவகாரம்

திரு சாம் சங்கரசிவம் – வெளியீடுகள் ஆவணக் காப்பகத்துறை

திருமதி ரஜனி சின்னத்தம்பி – தமிழ் கலைகள் தொன்மை பேணல்

திரு மகிந்தன் சிவசுப்பிரமணியம் – அரசியல் கைதிகள, போர்க்கைதிகள், இடம்பெயர்ந்தோர் விவகாரம்

திரு சிவகுருநாதன் சுதர்சன் – ஊடக விவகாரம்

செல்வி வாசுகி தங்கராஜா – அனைத்துலக விவகாரம்

திரு தணிகாசலம் தயாபரன் – அரசியல் விவகாரம்

திரு நிமால் விநாயகமூர்த்தி – பொருண்மிய அபிவிருத்தி, சூழல்துறை

மீளமைக்கப்பட்டுள்ள அமைச்சரவையில் புதிய உறுப்பினர்கள் பலர் இணைக்கப்பட்டும் ஏற்கனவே இருந்த சில அமைச்சுக்களைப் பிரித்தும், வேறு சிலவற்றின் பொறுப்புக்கள் மாற்றப்பட்டும் உள்ளது.

விசுவநாதன் ருத்ரகுமாரன்
பிரதமர்
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

Comments

Powered by Facebook Comments

Reader Feedback

2 Responses to “தமிழீழ அரசாங்கம் மீளமைத்துள்ள அமைச்சரவையின் விபரங்கள்!”

  1. Congratulations தமிழீழ அரசாங்கம்.

  2. malar says:

    மக்களை மனிதாபிமாம் கொண்டுமதிக்கப்படாமல் மற்றைய மதகலாச்சாரங்களை அழித்து பெளத்தமதத்தை பரப்பஎடுக்கும் முயற்ச்சியே இங்கையில் தொடர்ந்து அழிவுகளுக்கான காரணம்

    அதனை உணர்த்த ஒரு புத்தரோ யேசுவோ பிறப்பெடுத்தால் மட்டுமே இனவாத அரசாங்கத்தை மாற்ற முடியும் .

    சைவ சமயம் என்பதன் புனிதத்தன்மை என்பதற்கு மதிப்புக் கொடுக்காமல் ஈழத்தின் வரலாற்றுப் புகழை அழிக்கும் பிற மதத்தவர்கள் இலங்கை இந்தியாவினது சுதந்திரம் என்பது ஈழத்தின் வரலாற்றுச் சிறப்பில் தான் உருவாக முடியுமே தவிர மந்திரவாதியாக யாரும் மாறி அதனை செய்ய முடியாது ஈழத்தமிழினமும் தமது சுதந்திரத்திற்காக போராடியவர்கள் அவர்களது சுதந்திரம் மதிக்கப்படுவதற்கு அப்பால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச போன்ற அரச பயங்கராவாதிகளுக்கு அடிபணியும் அரசியல் தலைவர்களால் இலங்கையின் எதிர்காலம் பாதிக்கப்படுவதனை உணராமல் இன்னமும் விடுதலைப்புலிகள் என்பதினூடக தமிழினத்தை ஒடுக்க முயற்ச்சிப்பதானது இன்னும் எது வரை காலம் நீடிக்கும் என்பதனை சகல தரப்பும் உணரப்பட வேண்டும்.

    அதற்காக இதுவரை காலமும் விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு சார்பாகவோ எதிராகவோ செயல்பட்வர்கள் தற்போது நாம் தான் தமிழினத்தின் தலமைத்துவம் என்பதில் எந்த அரத்தமும் இல்லை உண்மையான மக்களது நிலமைகளை உணர்ந்து எதிர்கால ஈழத்தமிழினத்தின் சுதந்திரத்திற்காக செயல்படாத எவரும் தமது கடமையில் தவறு செய்கின்றார்கள் என்பதனை உணர்த்த எதிர்காலம் இல்லை . என்றால் எந்த மதமாக இருந்தாலும் கடவுள் சக்தியே இல்லை என்பதே அர்தமாகும்

    காரணம் தற்பாதுகாப்பின் அடிப்படையில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக உருவான போராட்டத்தை விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு உட்பட்டு மட்டும் கணிக்க முடியாது அவர்களது அர்பணிப்பு நிறைந்த போராட்டம் இதுவரை இலங்கை அரசாங்கம் அவமதிக்க பல காரணங்கள் இருந்தாலும் கூட அவர்களது விடுதலைக்கான நியாயத்தன்மையை வளர்பதும் அரசாங்கம்தான் என்ற யதார்தம் புரியாத இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஒருவிடுதலைப்போராடத்தின் நியாயத்தன்மையை அவமதிக்க இனி மந்திரவாகளை தேடினால் கூட ஆச்சரியப்பட எதுகுமே இல்லை.என்பதே தமிழினத்தின் அவிப்பிராயம் காரணம் ஈழத்தமிழினத்தினால் மட்டும்தான் இலங்கையின் எதிர்காலத்தை காப்பாற்ற முடியும் என்பதனை இலங்கைவாழ் தமிழினம் மட்டுமல்ல சிங்கள மக்களும் உணரவேண்டும். தமிழினத்தின் இனஅழிப்பை நியாயப்படுத்த அபிவிருத்தி என்பது அர்தமற்ற ஒன்றாகும் காரணம் இராணுவம் ஒடுக்குமுறையில் ஒருஇனம் வாழ ஆரம்பிக்கப்பட்டு 40வருடங்கள் அதற்கான நியாயங்கள் விமானக் குண்டுக்கு அடிமையாக வாழ்ந்த இனத்தின் சுதந்திரம் என்பதும் சமூக கட்டுப்பாடு என்பதும் தமிழினத்தின் ;ஆட்சி முறையை கைவிட்டு பெளத்த மதத்தை வளர்பதற்கு அபிவிருத்தி என்பதினூடக தமிழினம் ஏமாற முடியாது ஆயுதம் ஏந்தியவர்கள் தமது இனத்தின் சுதந்திரத்திற:கான தேவையின் அடிப்படையில் சர்வதேசம் வரை தமது இனவிடுதலையை நிரூபித்தமைக்கு அமைய அரசியல் தீர்விற்கு அப்பால் பட்டதே அபிவிருத்தின் முன்னேற்றங்கள் என்பதனை தமிழர்தரப்பு சகவழிகளிலும் ஈழத்தமிழினத்தின்விடுதலைக்கான நியாயம் தொடர்ந்து வலிறுத்தப்படவேண்டும். அதனை மக்கள் கட்டமைப்பாக உருவாக்கப்பட்ட நா.க.த.அரசாங்கம் தமிழ் கூட்டமைப்பிற்கு மக்களின் ஆதரவின் அடிப்படையில் நம்பிக்கைக்கு ஏற்ப்ப செயல்பட வேண்டும்

Leave a Reply