‘போராட்ட வடிவங்கள் மாறலாம் ஆனால் எமது போரட்ட இலட்சியம்
மாறப்போவதில்லை.’
-தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் சிந்தனையிலிருந்து…
உன்னத தியாகச் செயற்பாட்டிற்கு உரமூட்டுவோம் 03.08.2012.
1.தொடர் இன அழிப்பு நடவடிக்கையில் ஈடுபடும் சிறிலங்காவினை ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வதை நிறுத்தவேண்டும்.
2.ஐநா ஆணைக்குழுவினரால் பரிந்துரை செய்யப்பட்டதற்கு அமைவாக அனைத்துலக சட்ட மீறலை விசாரிக்க அனைத்துலக சுயாதீன விசாரணை ஒன்றினை ஆரம்பிக்க வேண்டும். இதில் தமிழீழ மக்களுக்கெதிராக நடாத்தப்பட்ட போர்க்குற்றங்கள் மானிடத்திற்கெதிரான குற்றங்கள் மற்றும் தமிழ் இன அழிப்பு நடவடிக்கை என்பன உள்ளடக்கப்படல் வேண்டும்.
3.தமிழீழத்தில் அதிவேகமாக நடைபெற்று வரும் சிங்கள நில ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்த வேண்டும்.
4.தமிழினத்தின் அடிப்படை உரிமைகளுக்காக போராடி சிங்களச் சிறையில் விசாரணைகள் ஏதுமற்று தடுத்து வைக்கப்படுள்ள போர்க் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும். அவர்களின் மீதான வன்முறைத் தாக்குதல்கள் உடன் நிறுத்தப்பட்டு அனைத்துலக அபாய நிறுவனங்கள் அவர்களை தொடர்ச்சியாக சென்று பார்வையிடுவதற்கு அனுமதி வழங்கப்படல் வேண்டும்.
5.தொடர் இன அழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் சிறிலங்காவிற்கு வெளிநாடுகளில் அரசியல் தஞ்சம் கோரும் தமிழர்களை திருப்பி அனுப்புவதை உடன் நிறுத்த வேண்டும்.
ஆகிய ஐந்து அம்சக் கோரிக்கைகளை அனைத்துலக சமூகத்தில் முன்வைத்து ஒலிம்பிக் போட்டிகளை காணவந்திருக்கும் பன்நாட்டுமக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் திரு .சிவந்தன் கோபி அவர்களினால் நடாத்தப்படும் உண்ணாநிலைப்போராட்டம் வெற்றி பெற எமது வாழ்த்தையும் ஆதரவையும், தெரிவிப்பதோடு அவர்களின் உன்னத தியாகச் செயற்பாட்டிற்கு உரமூட்டும் வகையில் மக்களை அணிதிரளுமாறு உரிமையோடும் அன்போடும் கேட்டுக்கொள்கின்றோம்.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்
பிரான்ஸ் தமிழ் இளையோர் அமைப்பு






Comments
Powered by Facebook Comments