30.07.2003 அன்று பன்னாட்டுக் கடற்பரப்பில் காவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் முருகேசன், மேஜர் இசைநிலவன், மேஜர் புகழினி மற்றும் மேஜர் தனிச்சுடர் ஆகியோரின் 9ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
பன்னாட்டுக் கடற்பரப்பில் நடவடிக்கை ஒன்றில் ஈடுபட்டிருந்தவேளை எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட படகு விபத்தின்போது,
கடற்கரும்புலி லெப்.கேணல் முருகேசன் (கில்லரி) (கணேசன் சிவகுருநாதன் – ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம்)
கடற்கரும்புலி மேஜர் இசைநிலவன் (மதிவண்ணன்) (கந்தசாமி தனேந்திரன் – காரைநகர், யாழ்ப்பாணம்)
கடற்கரும்புலி மேஜர் புகழினி (விஜயராணி வடிவேல் – மூதூர், திருகோணமலை)
கடற்கரும்புலி மேஜர் தனிச்சுடர் (பூவிழி) (இராசலிங்கம் மலர்விழி – பூநகரி, கிளிநொச்சி)
ஆகியோர் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.
தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.







Comments
Powered by Facebook Comments