Thursday June 20th 2013

Archives

மனிதநேயன் சிவந்தனின் போராட்டத்திற்கு நாமும் வலுச்சேர்ப்போம் – சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மனிதநேயன் சிவந்தன் அவர்களின் மனிதநேய போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு அறிக்கை விடுத்துள்ளது.

அவ் அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,

எம் தேசத்தின் விடுதலைப்பயணத்திலே புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தினராகிய நாம் இன்று அனைத்துலகத்தின் கவனத்தை ஈர்ப்பதற்காகவும், தமிழ் இனப்படுகொலைக்கு நீதிகேட்டும் வரலாற்று முக்கியத்துவம் பெற்ற ஒலிம்பிக் விளையாட்டை முன்னிறுத்தியும், உலக நாடுகளின் தலைவர்கள், மனித நேய ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்ளும் திடலுக்கு முன்பாக ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மனிதநேயன் சிவந்தன் அவர்களின் மனிதநேய போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக ஒலிம்பிக் அமைப்பின் தலைமைக் காரியாலயம் அமைந்துள்ள சுவிஸ் நாட்டின் லவுசான் நகரில் ஒலிம்பிக் கண்காட்சியகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பும், “கறுப்பு ஜூலை 83″ நினைவு கூரல் நிகழ்வும் 27.07.2012 அன்று 15.30 முதல் 20.30 வரை ஏற்பாடாகியுள்ளது.

எம் மாவீரர்களும், போராளிகளும், தேசிய இனஉணர்வாளர்களும், மக்களும் செய்த தியாகங்களுக்கும், அர்ப்பணிப்புகளுக்கும் செயல் வடிவம் கொடுக்கின்ற கடமை புலம் பெயர்ந்த மக்கள் கைகளில் தங்கியுள்ளது. அதை தமிழ் மக்கள் ஆகிய நாம் உலக நாடுகளின் கவனத்திற்கு எடுத்துச் சென்று எமக்கான அரசியல் பலத்தை வலுவடைய செய்து எமது இலட்ச்சியத்தியத்திற்கான அங்கீகாரத்தை பெற வேண்டும்.

மனிதநேயர்களின் ஐந்து அம்சக் கோரிக்கைகள்

1.தொடர் இன அழிப்பு நடவடிக்கையில் ஈடுபடும் சிறிலங்காவினை ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வதை நிறுத்த வேண்டும்

2. ஐநா ஆணைக்குழுவினரால் பரிந்துரை செய்யப்பட்டதற்கு அமைவாக அனைத்துலக சட்ட மீறலை விசாரிக்க அனைத்துலக சுயாதீன விசாரனை ஒன்றினை ஆரம்பிக்க வேண்டும். இதில் தமிழீழ மக்களுக்கெதிராக நடாத்தப்பட்ட போர்க்குற்றங்கள் மானிடத்திற்கெதிரான குற்றங்கள் மற்றும் தமிழ் இன அழிப்பு நடவடிக்கை என்பன உள்ளடக்கப்படல் வேண்டும்.

3. தமிழீழத்தில் அதிவேகமாக நடைபெற்று வரும் சிங்கள நில ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்த வேண்டும்.

4.தமிழினத்தின் அடிப்படை உரிமைகளுக்காக போராடி சிங்களச் சிறையில் விசாரணைகள் ஏதுமற்று தடுத்து வைக்கப்பட்டுள்ள போர்க் கைதிகளை விடுதலைசெய்ய வேண்டும். அவர்களின் மீதான வன்முறைத் தாக்குதல்கள் உடன் நிறுத்தப்பட்டு அனைத்துலக அபய நிறுவனங்கள் அவர்களை தொடர்ச்சியாக சென்று பார்வையிடுவதற்கு அனுமதி வழங்கப்படல் வேண்டும்.

5. தொடர் இன அழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் சிறிலங்காவிற்கு வெளிநாடுகளில் அரசியல் தஞ்சம் கோரும் தமிழர்களை திருப்பி அனுப்புவதை உடன் நிறுத்த வேண்டும்.

எமது அன்புக்குரிய மக்களே; “போராட்டத்தின் வடிவம் மாறலாம் ஆனால் எமது இலட்சியம் மாறாது .” என்ற தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனைக்கு செயல்வடிவம் கொடுப்போம் வாருங்கள், லவுசான் நகரில் ஊசி ஒலிப்பிக் கண்காட்சியகத்திற்கு முன்பாக 27.07.2012 அன்று 15.30 முதல் 20.30 வரை என்று அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம் என சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு அறிக்கை விடுத்துள்ளது.

Comments

Powered by Facebook Comments

Leave a Reply