Wednesday June 19th 2013

Archives

பிரித்தானிய பிரதமர் வாசஸ்தலம் முன்பாக நடைபெற்ற 1983 ஆடிக்கலவர நினைவு கூரல் நிகழ்வுகள்

பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனின் டௌனிங் வீதியில் உள்ள வாசஸ்தலம் முன்பாக நேற்று மாலை நூற்றுக் கணக்கான தமிழ் மக்கள் ஒன்று திரண்டு 29 ஆம் ஆண்டு கறுப்பு ஜூலை இனப் படுகொலையை நினைவு கூர்ந்தனர்.

பிரித்தானிய தமிழர் பேரவையின் ஒழுங்கமைப்பில், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை நடை பெற்ற இந்த நிகழ்வின் போது, சிறிலங்கா அரசாங்கத்தின் தமிழ் மக்களுக்கு எதிரான தொடரும் மனித உரிமை மீறல்கள், இனபடுகொலை மற்றும் அராஜகங்களை கண்டிக்கும் நூற்றுக்கணக்கான சுலோக அட்டைகளையும் பதாகைகளையும் தமிழ் மக்கள் ஏந்தி நின்றனர்.

நினைவு உரைகளை பிரித்தானிய தமிழர் பேரவை செயற்பாட்டாளர் ஜெயா மற்றும் செல்வி ஜெனனி ஜெனநாயகம் ஆகியோர் நிகழ்த்தியிருந்தனர்.

இந்த நிகழ்வின் போது, சிறிலங்காவில் தொடரும் மனித உரிமை மீறல்கள் மற்றும் இனப்படுகொலைகளை கண்டித்தும் அவை தொடர்பில் சர்வதேச சமூகத்தின் பாரா முகத்தை விமர்சித்தும் இப் பிரமுகர்கள் உரை நிகழ்த்தினார்கள்.

1983 படுகொலையின் போது படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களை நினைவு கூர்ந்து, மெழுகு திரிதீபம் ஏற்றி அஞ்சலி நிகழ்வும் இடம்பெற்றது இதில் அனைத்து மக்களும் உணர்புபூர்வமான பங்குபற்றினர்.

இதேவளை, பொதுநலவாய நாடுகளின் அமைப்பில் இருந்து சிறிலங்காவை இடை நிறுத்துதல், கொழும்பில் அடுத்த வருடம் நடைபெற இருக்கும் CHOGM மாநாட்டை புறக்கணித்தல் மற்றும் தமிழ் மக்களின் தாயக பிரதேசங்களில் குடித்தொகை பரம்பலை மாற்றம் செய்வதற்கு பயன்படுத்த்தப்படும் இலங்கைக்கான அபிவிருத்திக்கான உதவிகளை நிறுத்துதல் ஆகியவை உட்பட பல்வேறு கோரிக்கைகள் உள்ளடங்கிய மகஜர் ஒன்றை பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனிடம் கையளிப்பதற்க்கும் பிரித்தானிய தமிழர் பேரவை ஏற்பாடு செய்துள்ளது.

Comments

Powered by Facebook Comments

Leave a Reply