தமிழீழ தேசிய மாவீரர் நினைவாக ஆண்டு தோறும் தமிழர் ஒருங்கிணைப்புக்…
…குழுவின் தமிழர் விளையாட்டுத்துறை நடாத்தும் மெய்வல்லுநர் தெரிவுப் போட்டிகள் கடந்த யூலை 07ம், 08ம், 14ம் திகதிகளில் பந்தன்( Pantin ) மைதானத்தில் நடைபெற்றது. அதே மைதானத்தில் இறுதிப்போட்டி 15ம் திகதி நடைபெற்றது. இப்போட்டிகளில் நல்லூர்ஸ்தான் விளையாட்டுக்கழகம், தமிழர் விளையாட்டுக்கழகம் 93, தமிழர் விளையாட்டுக்கழகம் 94, குருநகர் பாடுமீன்கள் விளையாட்டுக்கழகம், இளந்தமிழ் விளையாட்டுக்கழகம், தமிழர் விளையாட்டுக்கழகம் 95 போன்ற கழகங்களைச் சேர்ந்த வீரர்கள் சிறியவர் முதல் பெரியவர்கள் வiர் பங்கு கொண்டு சிறப்பித்தனர். காலநிலைகள் அவ்வப்போது ஒத்துழைப்பு வழங்காத போதும் ;போட்டிகள் யாவும் சிறப்பாக நடைபெற்றிருந்தன. போட்டிகளில் பங்கு பற்றிய போட்டியாளர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கி மதிப்பளிக்கப்பட்டனர்.
இறுதிப்போட்டிகள் 15ம் திகதி காலை 9.00 மணிக்கு பொதுச் சுடரேற்றலுடன் ஆரம்பமாகின. அதனைத் தொடர்ந்து பிரெஞ்சு, தமிழ் தேசியக்கொடிகள் ஏற்றல், மாவீரர் நினைவு வணக்கம், கழகங்களின் கொடியேற்றல், ஒலிம்பிக் தீபம் ஏற்றல், மாணவர்களின் அணிவகுப்பு மரியாதை என்பன இடம் பெற்று மெய்வல்லுநர் இறுதிப்போட்டிகள் ஆரம்பமாகியது.
விறு விறுப்பாகவும் உணர்வு பூர்வமாகவும் நடைபெற்ற இம் மெய்வல்லுநர் போட்டிகளில், தமிழர் விளையாட்டுக் கழகம் 93 எனும் கழகம் அதிக புள்ளிகளைப் பெற்று முதலிடத்தைப் பெற்றுக்கொண்டது. நல்லூர்ஸ்தான் விளையாட்டுக் கழகம் இரண்டாம் இடத்தையும், இளந்தமிழ் விளையாட்டுக் கழகம் மூன்றாம் இடத்தையும் தட்டிச் சென்றன. ஓவ்வொரு போட்டிகளிலும் முதல் மூன்று இடங்களைப் பெற்ற வீர, வீராங்கனைகளுக்கு வெற்றிக்கிண்ணங்கள் வழங்கப்பட்டு மதிப்பளிக்கப்பட்ட அதே வேளை, ஒவ்வொரு அகவைப் பிரிவிலும் சிறந்த வீர, வீராங்கனைகள் தெரிவு செய்யப்பட்டு மதிப்பளிக்கப்பட்டனர். நல்லூர்ஸ்தான் விளையாட்டுக் கழகத்திலிருந்து அதிகப்படியான சிறந்த வீராங்கனைகளும், தமிழர் விளையாட்டுக் கழகம் 93 இலிருந்து அதிக அளவு சிறந்த வீரர்களும் மதிப்புப் பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
மெய்வல்லுநர் போட்டிகளைத் தொடர்ந்து மாவீரர் நினைவு சுமந்த 2012 ஆம் ஆண்டுக்கான சுற்றுக்கிண்ண உதைபந்தாட்ட இறுதிப்போட்டியும் நடைபெற்றது. இவ் இறுதிப்போட்டியில் பாசையூர் சென் அன்ரனிஸ் விளையாட்டுக்கழகமும், நல்லூர்ஸ்தான் விளையாட்டுக்கழகமும் மோதியிருந்தன. மாவீரர் நினைவு சுமந்த சுற்றுக்கிண்ணத்தை தமதாக்கிக் கொள்வதற்காக இரண்டு கழகங்களும் தமது திறனை காட்டியிருந்தனர். இவ் இரண்டு கழகங்களினதும் ஆதரவாளர்கள் தமது ஆதரவை நல்கியிருந்தனர். 1-0 என்கின்ற அடிப்படையில் பாசையூர் சென் அன்ரனீஸ் கழகம் வெற்றியீட்டியிருந்தது. மூன்றாம் இடத்தை தமிழர் விளையாட்டுக்கழகம் 93 தமதாக்கிக்கொண்டது.
போட்டிகளில் வெற்றிபெற்ற வீரர்களுக்கு தாயக விடுதலைக்கான பிரான்சுக் கட்டமைப்பின் பொறுப்பாளர்கள் வெற்றிக் கிண்ணங்கள், சான்றிதழ்கள் வழங்கி மதிப்பளித்தனர். கழகங்களின் கொடியிறக்கல், தேசியக்கொடியிறக்கலுடனும், நம்புங்கள் தமிழீழம் பாடலுடனும் மாவீரர் நினைவு சுமந்த மெய்வல்லுனர் போட்டிகள் 2012 இனிதே நிறைவு பெற்றன.






Comments
Powered by Facebook Comments