Wednesday June 19th 2013

Archives

இது கூத்துக் காட்டும், பைத்தியம் பிடித்த, ஊத்தை அரசாங்கம்!- விக்ரமபாகு கருணாரத்ன

இலங்கையில் கூத்துக் காட்டும் பைத்தியம் பிடித்த ஊத்தை வேலை செய்யும் ஒழுக்கம், நோக்கம் அற்ற, அழிவை ஏற்படுத்தக் கூடிய, மக்கள் விரோத அரசாங்கம் வரலாற்றில் ஒருபோதும் உருவானதில்லை என விக்ரமபாகு கருணாரத்ன குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் பல அபிவிருத்திகள் இடம்பெறுவதாக அரசாங்கம் தம்பட்டம் அடித்தாலும், மக்களுக்கான பயனுள்ள அபிவிருத்திப் பணிகள் எதுவும் இடம்பெறுவதில்லை எனவும் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தியை அனுபவிப்போர் இரண்டு சத வீத்த்துக்கும் குறைவான மக்களே என அவர் தெரிவித்துள்ளார்.

ஒன்றிணைந்த எதிர்க்கட்சி கடந்த 16 ஆம் திகதி ஏற்பாடு செய்திருந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தொடர்கையில்,

ஊழல், மோசடி, அடக்குமுறை மூலம் பல திட்டங்களை முன்னெடுத்து எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலை வெற்றிகொள்ள அரசாங்கம் முனைவதாகவும் அதற்கு இடமளிக்க முடியாதெனவும் குறிப்பிட்டார்.

உண்மையில் இந்த அரசாங்கம் ஏகாதிபத்திய அரசாங்கம் என்று சொல்லும் நிலையில் கூட இல்லை. உலகில் ஏகாதிபத்திய அரசாங்கமாக இருந்தாலும் அதற்கு அதிகாரம் செயற்பாடுகள் குறித்து வரையறை, நோக்கம் இருக்கும்.

இந்த வகையில் இந்த அரசாங்கத்திடம் அவ்வாறான திட்டமும் இல்லை. ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொன்றை சொல்லும் இந்த அரசுக்கு அதனை செயற்படுத்த முடியாத பைத்தியக்கார அரசாக மாறியுள்ளது.

நாய் குரைக்கிறது… தவளை பக்.. பக்.. என்கிறது அது போன்று கோத்தபாய ராஜபக்ச ஊத்தைப் பேச்சு பேசுகிறார். அதற்கு காரணம் அவருக்கு ஊத்தை பேச்சு மாத்திரமே தெரியும்.

அரசின் பொருளாதார கொள்கைக்கு எதிராக நாம் இந்தப் போராட்டத்தை நிறுத்தாமல் நடாத்திச் செல்வோம். இந்தப் போராட்டத்திற்காக அன்று ஒத்துழைப்பு வழங்கிய வாசுதேவ நாணயக்கார, டியு.குணசேகர, திஸ்ஸ விதாரண ஆகியோர் இருப்பது எங்கே?

இந்த வகுப்புப் போராட்டத்தை நீங்கள் முன்னெடுத்திருந்தால் இன்று நாம் ஏன் மேடையில் இருந்து கேள்வி கேட்கிறோம். உடனடியாக அரசில் இருந்து விலகி இந்த வகுப்புப் போராட்டத்தில் இணைந்து கொள்ளுமாறு வலியுறுத்துகிறோம்.

இவ்வாறு கூத்துக் காட்டும் பைத்தியம் பிடித்த ஊத்தை வேலை செய்யும் ஒழுக்கம், நோக்கம் அற்ற, அழிவை ஏற்படுத்தக் கூடிய, மக்கள் விரோத அரசாங்கம் வரலாற்றில் ஒருபோதும் உருவானதில்லை என விக்ரமபாகு கருணாரத்ன குறிப்பிட்டுள்ளார்.

Comments

Powered by Facebook Comments

Reader Feedback

One Response to “இது கூத்துக் காட்டும், பைத்தியம் பிடித்த, ஊத்தை அரசாங்கம்!- விக்ரமபாகு கருணாரத்ன”

  1. நாய் குரைக்கிறது… தவளை பக்.. பக்.. என்கிறது அது போன்று கோத்தபாய ராஜபக்ச ஊத்தைப் பேச்சு பேசுகிறான். அதற்கு காரணம் அவனுக்கு பைத்தியம். அவன் பெயரே “ஊத்தை பச்சை ராஜாPISSU.

Leave a Reply